நந்தனார் - சொல்லினுமடங்காத
சோதிபரமானந்தத்
தில்லைநாயகரைத்
தேவரறியாரோ வென்றார்
புலையர் - முண்டாசு கட்டிவரும்
நொண்டிவீரப்பனைக்
கொண்டாடிப்பூசைகளைக் கொள்ளுவீ
ரென்றார்
நந்தனார் - அண்டங்கள் பதினாலுக்
கப்பாலுமிப்பாலும்
நின்றார்க்குமுண்டாசு
நிலையாது என்றார்
புலையர் - கச்சையரிவாள்வைத்த
கறுப்பண்ணசாமியை
இச்சையுடன்வேண்டி
என்தெய்வ மென்றார்
நந்தனார் - பச்சிலைபிடுங்கியே
பாதத்தில்சாற்றினால்
இச்சையானதுமீயும்
என்தெய்வ மென்றார்
புலையர் - நேயமறிகோழியு நிணமூன்றுசாவலும்
தீயகள்ளும்வைத்துத் தரிசித்து நின்றார்
நந்தனார் - வாயாலேசிவமென்று
வருந்தினாலெப்போதும்
தாயரைப்போலவே
தழுவிவரு மென்றார்
புலையர் - பித்துப்பிடித்திருக்கும்
பேயனாம்நந்தனுக்கு
சித்தந்தெளிந்திடவே செய்தருள்வீ
ரென்றார்
நந்தனார் - பக்திவெள்ளம்பெருகிப்
பாய்ந்தாலுஞ்சேரியில்
நத்தையுறுஞ்சுஞ்சாதி
நாடாது என்றார்
___________
வசனம்.
இவ்வகைப் பூசைபோட்டுத்
தெய்வங்களைக் கொண்டாடும் புலையர்களைப்
பார்த்து
நந்தனார்
சொல்லுகின்றார்.
ராகம்-தோடி; தாளம்-ஆதி.
பல்லவி.
பக்திசெய்குவீரே-நடேசனைப் -
பக்திசெய்குவீரே.
|