தில்லையம்பலந்தனில்
திருநடமாடிடும்
தேவாதிதேவனை தினம்பணிந்தேதேத்தியே
அல்லல்சம்சாரக் கடலிலழுந்தாமல்
ஆனந்தக்கூத்துக ளாடிக்கொண்டு
நீங்கள் (பக்தி)
விருத்தம்.
இத்தனைநாட் பரமசிவன்
றிருமகிமை யிரவுபக லெடுத்துச் சொன்னேன்
பக்திபுரி யுமவர்க்கே யருள்புரியு
மையன் பாதம் பணிவீரென்றேன்
அத்தனையு மிழந்திடேவே மனவெறுப்பா
யெந்தனையு மவமா னித்தீர்
புத்திசொல்வே னென்றவர்கள் முழந்தாளில்
தடிகொண்டு புடைத்திட்டாரே.
வசனம்.
நந்தனார் மகாபலசாலியானபடியால்,
புலையர்களை சிட்சித்து சிவநாமத்தைச்
சொல்லச்சொல்லுவார்:
தண்டகம்.
ராகம்-மோஹனம்; தாளம்-மிச்ர
ஏகம்.
தத்திப்புலிபோலே தாண்டிக்
குதிப்பார்
முத்தமிடுவதுபோலே முகத்தைக்
கடிப்பார்
வார்கொண்டுகட்டி வளைத்துப்
பிடிப்பார்
தூர்க்கல்லெடுத்துத் துடைக்குள்
நெரிப்பார்
பல்லாற்சுரண்டியே பரம்படித்
திழுப்பார்
கல்லாலெறிந்தவர் காயப்
படுத்துவார்
குப்புறத்தள்ளியே கோபித்
துரைப்பார்
செப்பும்சிவனை நீர் சேவிப்பீ
ரென்றார்.
வசனம்.
இப்படி சிட்சித்தபின்பு,
புலையர்களெல்லோரும் நந்தனாரடிக்குப் பயந்து
பக்திசெய்யத் தொடங்கினார்கள்.
|