கட்கா.
அரகரசிவசிவ அம்பல
வாணா
தில்லையம்பல தேசிக
நாதா
புரமூன்றெரித்த பொன்னம்
பலனே
கரியுரிபோர்த்த கருணா
கரனே
அனுதினமன்று ளாடிய
பாதா
பிழைபொறுத்தாளும் புண்ணியம் தாதா
வசனம்.
மூடப்புலையர்களுக்குப் புத்திவருமாவென்று
நந்தனாரிப்படிச் சொல்ல யாவரும்
தொழுதார்கள்.
ராகம்-எதுகுலகாம்போதி; தாளம்-ஆதி.
பல்லவி.
பக்திகள்செய்தாரே-பரமசிவனையே-பக்திகள்
செய்தாரே.
சரணங்கள்.
பக்திகள்செய்தார்
நற்றவம்புரிநந்தன்
சித்தமகிழ்ந்திட வத்தனைபேர்களும் (பக்திகள்)
தொடுப்பான்சிவகதை
படிப்பான்பக்தியாய்
எடுப்பான்தடியொன்று அடிப்பானென்றனுதினம்
(பக்திகள்)
கல்லாதவனிங்கே
செல்லாதவன்நன்றி
யில்லாதவன்வெகு பொல்லாதவனென்றே (பக்திகள்)
_____________
வசனம்.
அந்தச் சேரியிலே புலையர்கள் பக்திசெய்ததால்,
சேரி சிவலோகம்போல
விளங்கியது. சிலநாளுக்குப்
பின்பு புலை
|