திருநாளைப்போவார்57நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

யர்களெல்லாங்கூடி நந்தனாரைப் பணிந்து நல்லவார்த்தை சொல்லி, “நாங்களெல்லோரும்
நாளொன்றுக்கு மூன்று விசை சிவனேயென்று சொல்லுகிறோம், மற்றவேளையில் எங்கள்
பண்ணைத்தொழிலைச் செய்வோ”மென்று கேட்க, “நந்தனார் நல்லது அப்படியே
தப்பாமல் செய்யுங்க”ளென்று சொல்லிவிட்டுச் சேரி பெரிய கிழவனுடன்
திருப்புன்கூருக்குப் போய்வந்த புலையர்களைப்பார்த்துச் சொல்லுவார்:-

விருத்தம்.

கொள்ளையெனும் பிறவிவிரை முளைவீ சாமற்
     குடிமாறிப் போவதற்கோர் வகையைக் கேட்க
கள்ளமனக் குரங்கதனால் விடைய மாச்சு
     கட்டியிருந் தாலிருந்த ப்ரவ்ருத்தி போச்சு
உள்ளங்கைக் குள்ளிருக்குங் கனியைப் போல
     உருவில்லா தான்மாவே றறுத்து வாழ்வீர்
எள்ளளவும் பிசகில்லை யென்ற ஞானம்
     ஏற்றுவார் மும்மலத்தைத் தூற்று வாரே.

ராகம்-எதுகுலகாம்போதி; தாளம்-ரூபகம்.

பல்லவி.

பார்த்துப்பிழையுங்கள்-நீங்கள்-பார்த்துப்பிழையுங்கள்.

சரணங்கள்.

பார்த்துப்பிழையிந்தச் சோற்றுத்துருத்தியை
ஏத்தித்தொழவேண்டாம் காத்துப்போகுமுன்னே (பார்த்து)

ஆத்திமதிசூடுங் கூத்தனிளமாயச்
சூத்திரத்தையிந்த க்ஷேத்திரத்துள்ளாடிப் (பார்த்து)