திருநாளைப்போவார்58நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வீற்றிருப்பீர்காலங் காத்திருப்பான்சிவ
சாஸ்திரத்தைஞான நேத்திரத்தாலுற்றுப் (பார்த்து)

மூலக்கனல்தாண்டி மேலக்கரைவந்து
பாலைக்குடியிந்த நாலுக்குள்வாராமல் (பார்த்து)

பாலகிருஷ்ணன்தொழுங் கோலப்பதங்களை
மேலுக்குமேல்நாடி சாலக்கலியறப் (பார்த்து)

ராகம்-சாரங்கா; தாளம்-சாபு.

பல்லவி.

தில்லைச்சிதம்பரம் யென்றே நீங்கள்
ஒருதரஞ்சொன்னால் பரகதி யுண்டுண்டு. (தில்லை)

அனுபல்லவி.

நல்லஸ்ருதிமுடி கண்டு-சபா
நாதன்திருத்தாளை சிந்தையிற் கொண்டு (தில்லை)

சரணங்கள்.

வேரில்லாமலொரு வ்ருட்சமொன் றிருக்கு
     விளையும்வினைகளெல்லாஞ் செய்யுந் திருக்கு
பேரில்லாமல்ஞானத் தீகொண்டு கருக்கு
     பேரின்பவாணரைப் பிசகாமலே நெருக்கு (தில்)

தேசம்புகழுந்தில்லைக் கோவிலை வளைந்து
     தித்திக்குஞ்சிவபஞ் சாட்சரம் புரிந்து
ஆசையுடனேயர்த்த சாமத்தி லிருந்து
     அங்கம்புளகிதமா யடிக்கடியே பணிந்து (தில்)

மாயன்கோபால க்ருஷ்ணன்தினந் தேடி
     வருந்துஞ்செந்தாமரை மலரடியே நாடித்