தாயைப்பிரிந்திளங் கன்றுபோல்
கூடித்
தனித்திருந்துதாளம் போட்டுக்கொண்
டாடி (தில்)
ராகம்-கௌளிபந்து; தாளம்-ஆதி.
பல்லவி.
நமக்கினியமபயமேது-தில்லை-நடராஜனிருக்கும்போது
அனுபல்லவி.
மார்க்கண்டருக்காக
மறலியையுதைத்திட்ட
மான்மழுவேந்தும் மகாதேவனிருக்க (நமக்கினி)
சரணங்கள்.
இம்மைமறுமைமுதல்
யாவுக்கும்பரமான
சின்மயானந்தரூபச்
சிவபெருமானிருக்க (நமக்கினி)
அரியயனமரரும் ஆலங்கண்டஞ்சுமுன்
பரிவுடனேகாத்த பரமசிவனிருக்க (நமக்கினி)
திருவிக்ரமனாய்வரும்
திண்மாயன்மமதையை
விரிவுகங்காளனாகி விலக்கும்பரனிருக்க (நமக்கினி)
ஆதிசேடனுமாலும்
அலரோன்இலக்குமியும்
காதலாய்த்தவஞ்செய்யக் களித்தபரனிருக்க (நமக்கினி)
இரண்யனால்வெறி
கொண்டநரசிம்மனை
தரணியில்ரக்ஷித்த சங்கரனிருக்கவே. (நமக்கினி)
ராகம்-தோடி; தாளம்-ஆதி.
பல்லவி.
சங்கரனைத் துதித்தாடு-இனி-சனனமில்லைஎன்று
பாடு
|