திருநாளைப்போவார்6நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சக்கரைமுக்கனியவல் தமைநுகர்நாத ருக்கும்
சகலதேவர்தமக்குஞ் சகலவசுக்க ளுக்கும்
பக்குவமாகவிதைப் பாடும்சங்கீத ருக்கும்
பார்மகட்கும்பங்கயப் பாவையர்க்கும்விஜய (ஆதி)

_____________

பெரியபுராணச் செய்யுள்.

எண்சீர்க் கழிநெடிலடி விருத்தம்.

* திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவே
       தியரரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு
   குரைகழன்மா மாத்திரரொன் றறுவர்முடி மன்னர்
       குறுநிலமன் னவரைவர் வணிகர்குலத் தைவ
   ரிருமைநெறி வேளாளர் பதின்மூவ ரிடைய
       ரிருவர்சா லியர்குயவர் தயிலவினை யாளர்
   பரதவர்சான் றார்வண்ணார் சிலைமறவர் நீசர்
       பாணரிவ ரோரொருவ ராம்பகருங் காலே.

புராணிகர் சொல் வசனம்.

பெரிய புராணமென்று சொல்லப்பட்ட நூல் சேக்கிழார் சுவாமிகளாலே
செய்யப்பட்டது. ஸ்காந்த புராணத்திலும், இன்னு மனேக புராணங்களிலுஞ
சொல்லப்பட்ட பக்திமார்க்கங்களாகிய கடலிலே நீரைக் கையாலள்ளிக்
குடித்ததுபோலச் சில கீர்த்தனங்களினாலும், விருத்தங்களினாலும், சிவபக்தர்கள்
சரித்திரங்களைக் கொண்டாடுவது போலஉளறினேனென்று ஆனைதாண்டாபுரம்-
கோபாலகிருஷ்

* இது பெரிய புராணத்தில் சேக்கிழார் சரித்திரத்தில் 36-ஆவது விருத்தம்.