திருநாளைப்போவார்60நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அனுபல்லவி.

பொங்கரவணிந்திடும் பொன்னம்பலவனை
புந்தியில்நினைவாய்ப் போற்றி சிவனை தினமும் (சங்கர)

சரணங்கள்.

பாரினிற்பெண்கள்மேற்      கருத்துபோய்ப்
    பற்றவொட்டாமலே     திருத்து
பேரின்பஞானத்தை         வருத்து-சுகப்
    பெருவெளிநெஞ்சினி   லிருத்து (சங்கர)

நீர்மேற்குமிழியிக்          காயம்-என்றும்
    நிலையில்லாவாழ்விது  மாயம்
பெரியமாலயன்            நேயம்-பெறப்
    பேசுவரீதேயு           பாயம்-சிவ (சங்கர)

மனிதச்செனனத்தில்         தேடு-நல்ல
    மாதவத்தோர்களைக்     கூடு
தனிவெளியாமொரு          வீடு-தன்னைத்
    தத்துவத்தால்கண்டு      நாடு-சிவ (சங்கர)

வசனம்.

இப்படிச்சொல்லிய நந்தனாரைநோக்கி மற்றப் புலையர்கள் சொல்லுவார்கள்:

இருவர் வினாவிடை அலங்காரம்.

ராகம்-ஜயஸாவேரி; தாளம்-சாபு.

அவர்கள் - புண்ணாகியவிந்தப் பிறவிப்பிணிக்குமருந்
            துண்ணாமலிருப்பது உண்மையோ நந்தா