திருநாளைப்போவார்62நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

நந்தனார் - பாலுக்குச்சர்க்கரை பலித்ததுபோலுங்க
            ளாலுமன்றோவீடு நாடுது மைந்தா

அவர்கள் - தூலசரீரத்தைச் சுமந்துபிள்ளைப்பூச்சி
            போலேயானோ முன் தன்புண்ணியம் நந்தா

நந்தனார் - பாலகிருஷ்ணன்தொழும் பரமசிவனரு
            ளாலேபொங்கிவரு மானந்தம் மைந்தா

விருத்தம்.

ஓங்கார மென்றுசொல்லு முரலைப் போட்டு
     உறுதியெனு மிருப்புலக்கைக் கையி லேந்தி
ஆங்கார மென்றதட்டு வடிவ மிட்டு
     அடிக்கடியே கண்ணியதைப் புடைத் தெடுத்து
நீங்காத சிவயோக நீஷ்டை கொண்டு
     நிர்மலம தாயவர்கள் சுற்றி வந்து
பாங்கான நந்தனிரு தாளைப் போற்றிப்
     பணிந்திட்டார் திருநீற்றை யணிந்திட் டாரே.

வசனம்.

அவர்கள் நந்தனாரைவிட்டு நீங்கித் தனித்திருக்க மனம் வராமல் சொல்லுவார்கள்.

விருத்தம்.

தில்லையில் போக வேண்டாந் திரும்பிவந் தாலு மும்மைச்
செல்லாது பண்ணைப் பார்ப்பான் சினங்கொண்டு விடுவா ரிந்த
எல்லையி லிருந்து தானே ஈசனார் திருநா மத்தைச்
சொல்லிய நாலாம் வீட்டிற் சேருவோம் வாரீ ரென்றார்.

வசனம்.

அனல்கண்ட மெழுகதுபோலுருகி பக்தி வெள்ளம் பெருகிச் சொல்லியபேர்களை
நந்தனார் கரத்தால் ஆலிங்கனம் பண்ணிக் கண்ணீர் பெருகச் சொல்லுவார்: