திருநாளைப்போவார்63நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம்-யமுனாகல்யாணி; தாளம்-ஆதி.

தில்லைவெளியிலே கலந்துகொண்டாலவர் திரும்பியும்வருவாரோ
எல்லைகண்டபேரினிபிறவாரென் றியம்புவதறியாரோ
பெண்டுபிள்ளைகள் வெறுங்கூட்டம் அதுபேய்ச்சுரைக்காய்த்தோட்டம்
கண்டுகொள்ளுவார்பெரியோரறிவில் கனகசபையினாட்டம்
திருவாதிரையில்தரிசனங்காணத் தேடித்தியாரோ
அரிதாகியவிந்தமானிடங்கிடைத்தா லானந்தமடையாரோ
குஞ்சிதபாதத்தைக்கண்டாலொழிய குறையதுநீங்காதே
சஞ்சிதவினையாதிகளூடாடிய சடலமுந்தாங்காதே
சேரியிடையிலேகுடியிருந்தாலிந்தச்சென்மமுந்தொலையாதே
சிதம்பரம்போவேன்பதம்பெறுவேன் தடைசெய்வதுமறியாரே
இரவும்பகலுமொழியாக்கவலையிருப்பதுசுகமோடா
இன்பம்பெருகும்பரமானந்தவெள்ளமமிழ்ந்துநீபோடா.

வசனம்.

சிதம்பரம்போவேன் நீங்களிங்கே இருங்களென்று நந்தனார் சொல்லுவார்:

ராகம்-ஜந்ஜூடி; தாளம்-ஆதி.

பல்லவி.

சிந்தனைசெய்துகொண் டிருந்தாலுங்களுக்
கெந்தவிதமுங்கரை யேறலாம்சிவ (சிந்தனை)