திருநாளைப்போவார்64நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணங்கள்.

அந்தணமுனிவரு மிந்திரரமரரும்
வந்துபணியுமவர் விந்தைபொற்பாதத்தை (சிந்தனை)

காமனையெரித்தவன் காலனைஉதைத்தவன்
சோமனைதரித்தவன் தாமரைப்பாதத்தை (சிந்தனை)

தம்புருவணிந்திடுந் தும்புருநாரத
ரும்பணிந்திடும்பொன் னம்பலவாணனைச் (சிந்தனை)

வெம்பியதும்பிக் கருளியபாலகிருஷ்
ணன்பணியுந் திருவம்பலநாதனை. (சிந்தனை)

ராகம்-சாமா;தாளம்-ஆதி.

பல்லவி.

தில்லைத்தலமென்று சொல்லத்தொடங்கினா
லில்லைப்பிறவிப் பிணியும்பாவமும்

அனுபல்லவி.

சொல்லத்தகு மிதுவே சிவலோகம்
எள்ளத்தனையறஞ் செய்யில் அமோகந் (தில்லை)

சரணங்கள்.

ஆகமவேதபுராணங்கள்             சாஸ்த்ரம்
    அருந்தவம்புரிவார்க்கருளிய   பாத்ரம்
ஆலயமாயிரத்தெட்டினி           நேத்ரம்
    ஆனந்தத்தாண்டவமாடிய       க்ஷேத்திரம் (தில்லை)

கணத்திலாடுமணிமாவாதிய          சித்தியுங்
    கனகத்திலமரும்விண்ணாடர்கள்  வெற்றியும்