திருநாளைப்போவார்65நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

இணையில்லா தகுருசாஸ்த்ர         பக்தியும்
    இகத்தில்தானேவருஞ் சிவபத   முக்தியும் (தில்லை)

பரமரகசியமொன்று                பார்க்கலாம்
    பாலகிருஷ்ணன்கவிபாடிக்       கேட்கலாம்
கருமவினைகளடங்காமற்           போக்கலாம்
    கசடர்கட்குமுக்தியுமுண்        டாக்கலாம். (தில்லை)

வசனம்.

நந்தனார் ஞான உபதேசஞ் சொல்லக்கேட்டு, முன்னே நந்தனாருடன்
திருப்புன்கூரிற்போய் சிவதரிசனஞ் செய்து வந்தவர்களாகிய அறவன், தொந்தி,
ஆனையேறி, முத்துமாரி, கழனிகாத்தான், பாச்சலூரான், ஆண்டி, சேவகன், சொறியன்,
வெறியன், காணியாளன், எல்லைச்சுற்றியென்கிற பெரியகிழவன், இந்த ஆறிருபேர்களு
மானந்தமடைந்து அவரவர்கள் நிஷ்டையிலிருக்கத் தொடங்கி நின்றார்கள். மற்றப்
புலையர்கள் கூட்டங்கூடி நந்தனார் நம்மை நாளொன்றுக்கு மூன்றுதரஞ் சிவநாமத்தைச்
சொல்லச்சொன்ன குற்றத்தைப் பாராட்டி நந்தனை யடிமைகொண்ட அந்தணனிடத்தில்
சொல்லுவார்கள்.

விருத்தம்.

இரவுபகல் பரமசிவ னிணையடியே
     தொழுதிருக்கும் இன்பங் கூறிக்
கரைபுரளுங் கடலதுபோற் சிவத்தினிடைக்
     கருத்துணரக் கண்டெல் லோரும்
பரவிவரும் புலையர்களும் பண்புறவே
     நெறிகாட்டிப் பகரக் கேளீர்
அரியதொரு நந்தனிவ னடிமைபுரி
     யந்தணர்பா லறிக்கை செய்வான்.