நொண்டிச்சிந்து.
ராகம்-பைரவி; தாளம்-ஆதி.
ஐயேவொரு சேதிகேளும்-உங்கள்
அடுமைக்காரப்பயல் நடத்தையெல்லாம்
வரவரக் கெட்டுப்போச்சு-சேரியில்
வழக்கமில்லாதபடி பழக்கமிட்டான்
குடியிருக்கவே மாட்டோம்-எப்போதும்
கூக்குரல்போடுகிற னாக்கைமறந்தே
இருப்பா னொருவேளை-கொள்ளாத
ஏக்கமடைந்தவன்போல் நாக்கைவளைத்துச்
சிரிப்பா னொருவேளை-தில்லைச்
சிதம்பரமென்றுசொல்லி மதம்பிடித்தே
அழைப்பா னொருவேளை-எங்களையும்
அண்ணேன்வாவென்றுசொல்லி கிண்ணாரங்கொட்டி
குதிப்பா னொருவேளை-திக்குமுக்கல்
கொண்டவன்போ லெதையோ கண்டவன்போல
களிப்பா னொருவேளை-மரம்போல
கையசக்கல் காலசக்கல் மெய்யசக்கலும்
இருக்கா தொருவேளை-தாளம்போட்
டெக்கலிகொட்டியே குடிசைக்குட்புகுந்து
பேசா னொருவேளை-கண்டதெல்லாம்
புரட்டென்று சொல்லுவான் முரட்டுத்தனம்
மன்னாரு சாமிபோல-கிளம்பி
வாய்விட்டலறுங்குர லூரெட்டுமே
ஐயோ சிவனேயென்பான்-கீழேபுரண்
டழுவான் யாரையுந் தொழுவானே
தூண்டிமீனதுபோலே துள்ளித்துள்ளித்
|