திருநாளைப்போவார்68நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம்-பியாக்; தாளம்-ஆதி.

பல்லவி.

சேதிசொல்லவந்தோம்-நந்தனார்
சேதிசொல்லவந்தோம்.

அனுபல்லவி.

சாதிமுறைமைதெரியாதவனுமக்குத
வாதவனென்றொருமாதமாய்த்தெரிந்த (சேதி)

சரணங்கள்.

ஏரைப்பிடித்துச்சற்றே            உழுவான்-மன
     தேங்கித்தள்ளாடியே       விழுவான்-எங்கள்
சேரியைப்பார்த்தே             யழுவான்-சிவ
     சிதம்பரமென்றே      தொழுவான் ஐயே. (சேதி)

நாத்துமுடியைக்கையி           லெடுப்பான்-அதை
     நடத்தெரியாமலே          விழிப்பான்-இதைப்
பார்த்திடும்பேர்களைப்           பழிப்பான்-அடே
     பாவியென்றெங்களை  அடிப்பான் ஐயே. (சேதி)

உதட்டையசைத்துமுணு          முணுப்பான்-அவன்
     ஊணுறக்கத்தையுந்          துறப்பான்-நாங்கள்
அதட்டிப்பேசினா                லடிப்பான்-பொன்
     னம்பலவாணனைப்     படிப்பான்-ஐயே. (சேதி)

_________

ராகம்-கமாசு; தாளம்-ஆதி.

பல்லவி.

அடக்கியாளுமையே - அவனை - அடக்கியாளுமையே.