அனுபல்லவி.
அடக்கியாளுமந்தத்
துடுக்குக்காரன்தனை
அடித்துப்பிடித்துக் கண்டித்துப்படபடத்து. (அடக்)
சரணங்கள்.
பொன்னம் பலவா வென்றவன்
பேசி
பொழுதைப்போக்குவான் சாம்பலைப்
பூசி
சன்னதங்கொண்டவன் போலவே யேசி
சண்டைபிடிக்கவரு வானவன் தோசி. (அடக்)
பலித்துதையேவொரு
மந்திரம் போட்டான்
பழமையான எங்களை இனிக் கூட்டான்
குலத்தைக்கெடுக்கவந்த இவனொரு கோட்டான்
கோபக்காரனெங்கள் வழிபட
மாட்டான். (அடக்)
குளத்தைவெட்டச்சொல்லிக்
கூலியைக் கொடுத்தான்
கூட்டிக்கொண்டுபோய்ப் பயல்களைக்
கெடுத்தான்
களத்தைச்சீக்கவே யெங்களை விடுத்தான்
காடுமண்டிவருஞ் சுடலையிற் படுத்தான்.
(அடக்)
____________
வசனம்.
சேதிசொல்லவந்த புலையர்களைப்பார்த்து
வேதியர் சொல்லுவார்.
விருத்தம்.
காலமே வந்தா னிங்கே கள்ளக்கும்
பிடுகள் போட்டு
பாலனைப் போலே பேசிப் பசப்பினான்
போடா வென்றேன்
வேலைசூ ழுலகி லந்த வீணனைப்
போலே காணேன்
சீலமாஞ் சிதம்பரத்தைச் சேரவே விடைகொ டேனே.
|