திருநாளைப்போவார்7நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ணையன் பெரியோர் அடிவணங்கி ஆனந்தம் பெருகிச் சொல்லிய
திருநாளைப் போவார்
சரித்திரத்தை யாவரும் விரும்பிக் கேட்கும்படி சிரம்
வணங்கிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

உபமன்ய பகவான் ரிஷிகளுக்குச் சொல்லிய வரலாறு.

இவ்வுலகில் பெரிதாகிய வேதசாஸ்திரங்களுக்குள்ளே மிகவும் சாரமாகிய பரசிவ
பக்தியை உண்டுபண்ணுகின்ற பக்தவிலாஸத்தை அநேக ரிஷிகள் பிரார்த்தித்துக் கேட்க,
உபமன்யபகவானானவர் சொல்லிவரும்போது, பாரதம், பாகவதம், பகவத்கீதை,
சிவரகசியம், ஸ்காந்தம் முதலாகிய பக்தி ஞானவைராக்கிய சாஸ்திரங்களிலே மிகவும்
சாரமாகிய பரமசிவ பக்திபண்ணாத சதுர்வேத பாரங்கதனா யிருக்கின்ற
பிராமணனைப்பார்க்கிலும், பரமசிவ பாதாரவிந்த பக்தி பண்ணுகிறவன்
பறையனாயிருந்தாலும், பதினான்கு லோகத்தையும் பரிசுத்தம் பண்ணுவானென்று
உபமன்யபகவான் சொல்ல, அதற்கு ரிஷிகள் “பக்தி ஞானவைராக்கியங்களைத்
தெரியப்படுத்தாநின்ற வேதபுராணங்களைப் பார்க்க அறியாத அவிவேகிகளாயிருக்கிற
சண்டாளர்களுக்கு பக்தி எப்படி வரும்?” என்று கேட்க, உபமன்யபகவான்
சொல்லுகின்றார்:

உபமன்யபகவான் ரிஷிகளுக்குச் சொல்லுகிற

நொண்டிச்சிந்து.

ராகம்-புன்னாகவராளி; தாளம்-மிச்ர ஏகம்.

பழனமருங்கணையும்-புலைப்-பாடியதுகூறை வீடுதனில்
சுரையோபடர்ந்திருக்கும்-அதைச்-சுற்றிலும்நாய்கள் குலைத்திருக்கும்
பருந்தோடிவட்டமிடும்-இளம்-பச்சைப்பிசிதமே லிச்சைகொண்டு
கோழிகூவுங்கூக்குரலும்-பாழுங்-கொல்லையருகினில் வெள்ளெலும்பும்
நரம்புங்குவிந்திருக்கும்-பல-நெட்டிமிதந்திடுங் குட்டைகளில்