பண்ணவர் அயன்மாலுந்
தேடுமாம்-அந்தத்தில்லைக்காட்டில்
பாம்புபுலிக்குநிர்த்த மாடுமாம்
அரியபிரமனெழுத்தைத் தள்ளுமாம் - தனைஅடைந்தவர்களை
ஆனந்தமுழுக்காட்டிக் கொள்ளுமாம்
போய்தரிசித்தோர் புண்ணிய
சாலியாம் - அதை தருமராஜன்
புறம்புகாமல் தடுத்த வேலியாம்
உருவில்லாதகுருவொன் றிருக்குதாம்
- அது மூலக்கனலை
ஊதியெழுப்பிக்காண உருக்குதாம்
உருவமாகிவெளியே வருகுதாம்-அதுநான்மறைகட்கும்
உணர்வில்லாதகாட்சி தருகுதாம்-
போய்வருகவுத்தாரந் தாருமே - தங்கள் பொன்னடித் தூள்
போற்றுவேன்திருக்கண்ணால்
பாருமே. (தில்லை)
வசனம்.
சிதம்பரம் போவேனேயென்று அந்தணர்கேட்கும்படி
நந்தனார்சொல்லுகின்றார்:
ராகம்- சுரடி; தாளம் - ஏகம்.
தாதரிகிட-தகஜம்தரி-ஜணதஜணா-ததிமிதகிட-தகணம்தரி-தீனதத்திம்
தகஜம்தரிகும்தரிணம்-தகணம்திதின்னத்தின்ன-ஜணம்தணம்தஜணுஜனுத
தத்தின்னாகிடதகதோம்-தத்தின்னாகிடதகதோம்-தத்தின்னாகிடதகதோமென
பல்லவி.
ஆடியபாதத்தைக்காணாரே-பிறந்-தானந்தம்பூணாரே.
அனுபல்லவி.
நாடுந்தைப்பூரணபூசத்திலே
தில்லை
நாயகனார்குருவாரத்திலே மன்றுள் (ஆடிய)
|