திருநாளைப்போவார்72நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணங்கள்.

பாசமறுத்துடல் வாசியொடுக்கி
      பக்திபண்ணுங்காட்டில் பாம்புபுலிக்கி
ஆசையுடனேநல் லருளைப்பெருக்கி
      அன்பர்களிக்கச் சிலம்புகுலுக்கி. (ஆடிய)

கொட்டமடிக்கும் புலன்தொழில்நீக்கி
      கோடிகாலஞ்செய்த பாழ்வினைபோக்கி
வெட்டவெளியிலே நெட்டிடத்தூக்கி
      வேதம்பணிந்திடத் தென்முகம்நோக்கி. (ஆடிய)

சேணுஞ்சடைப்புனல் பூமியில்சொட்ட
      சேவித்துநாரதர் பாடியேகிட்ட
கோணங்கிழிந்தண்ட கோளமுமுட்ட
      கோபாலகிருஷ்ணனு மத்தளங்கொட்ட. (ஆடிய)

வசனம்.

ஆனபடியால், நான்சிதம்பரம்போக உத்தரவு தர வேணுமென்று அந்தணரைத்
திருநாளைப்போவார் கேட்கின்றார்:

ராகம் - தோடி; தாளம் - ஆதி.

பல்லவி.

உத்தாரந்தாரும்ஐயே-என்
கொருவருமில்லை-நான்பரகதியடைய (உத்தாரந்)

சரணங்கள்.

வித்தைகள்கற்றதுமில்லை-யானொரு
பக்தியிற்சென்று பரகதியடைய (உத்தாரந்)