குற்றங்களெத்தனைக்
கொடியேன்செய்தேன்
அத்தனையும்பொறுத் தாதரவாக (உத்தாரந்)
பெண்டுபிள்ளையென்று
பேயனைப்போலவே
கண்டுகளித்துக் காலங்கழித்தவனுக்கு (உத்தாரந்)
தில்லைச்சிதம்பரத்தை
தரிசித்துவந்துங்க
ளெல்லையைக்காத்துக் கொண்டிருக்கிறேனையே. (உத்தாரந்)
வசனம்.
நந்தனார் சிதம்பரம்போக
உத்தரவுகேட்டதனால், வேதியர் அடிமையைப்
பார்த்துச்சொல்லுகின்றார்.
விருத்தம்.
படிபுகழ் தில்லை நாதன் பத்தியே
யுருவாய் வந்து
கடிநக ராத னூரில் களித்திடும் நந்த னென்று
சிடுசிடு மூஞ்சி காட்டிச் சில்விடம்
போலே நெஞ்சம்
துடிதுடித் திடவே ஞாயந் தோசியும்
பேசு வாரே.
ராகம்-சங்கராபரணம்; தாளம்
- மிச்ர ஏகம்.
சேரிமுற்றுஞ்சிவபக்திபண்ணும்படி
விட்டையாமடியிட்டையா
சேதிசொல்லவேணுமென்றுமிங்கேநீ
வந்தையோ அகமகிழ்ந்தையோ
காலைமாலையினில்வந்துதரிசனங்
காட்டுறாய்நிலைநாட்டுறாய்
கதறினாலுமூர்க்குருவிகருடன்போ
லாகுமோவதிவேகமோ
அடிமைவேலைசெய்யுமுன்தனுக்கிந்தக்கொண்
டாட்டமோசெனக்கூட்டமோ
|