திருநாளைப்போவார்74நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அடக்கியாளமாட்டேனோசிங்கக்குட்டி
     யல்லவோஅதைச்சொல்லவோ
காளிபூசையவர் போடும்போதுநீயும்
     கண்டித்தையாம் மிகதண்டித்தையாம்
கபடமெல்லாம்வெளிப் படுவதாகும்வழி
     காட்டுறேனிதைநாட்டுறேன்.

____________

வசனம்.

நந்தனார் சிதம்பரம் போகிறேனென்று சொல்லுவதால் அந்தணர் கண்டிக்கிறார்:

ராகம்-மோகனம்;தாளம்-ஆதி.

பல்லவி.

பறையாநீசிதம் பரமென்றுசொல்லப்
படுமோடாபோகப்படுமோடா-அடா (பறையா)

அறியாத்தனமினிசொன்னாலினிமே
லடிப்பேன்கூலியைப்பிடிப்பேன்பாவிப் (பறையா)

சிதம்பரமென்பதை            விடு-கொல்லைச்
    சேரடியிலேவந்து         படு-நாத்தைப்
பதத்திற்பிடுங்கினதை         நடு-கறுப்
    பண்ணனுக்கேபலி         கொடுத்திடு-அடா. (பறையா)

எப்போதுமொருதடி           பிடி-கையி
    லெடுத்துக்கொண்டேதமுக் கடி-உள்ளங்
கற்பனையாய்ப்பள்ளு         படி-உன்தன்
    கால்நோகாமலேகாடியைக்குடி-யடா. (பறையா)