கள்ளந்தீருதற்குப்
பாரு-உன்
கால்படும்பண்ணையில் சேரு-இதை
சொல்வதுதானுனக்
காரு-எப்போதும்
சுகமுடன்வாழ்வது
சீரு-அடடா. (பறையா)
___________
விருத்தம்.
ஒதியடி வீரா வென்றும்
உக்கிர மாடா வென்றும்
பதிபெறுங் கறுப்பா வென்றும் பாவாடை ராயா வென்றுந்
துதிபெறு மிருளா வென்றுந் தொட்டியச்
சின்னா னென்றும்
மதுக்குடம் பிசிதம் வைத்து வருந்தியே
வணங்கு வாயே.
வசனம்.
அந்தணர் நந்தனாரைக்
கண்டித்து மறுபடியும் நல்ல வார்த்தைகளால்
சொல்லுகின்றார்:
ராகம்-மாயாமாளவகௌள; தாளம்-ஆதி.
பல்லவி.
நந்தா-வொருசேதிசொல்வதைக்கே
ளிந்த-பங்குதோன்றியநாள்முதல்
சொந்த-முறியெழுதிக்கொடுத்துநீ
வந்த-பறையனலவோமறந்தாயா (நந்தா)
பாரு-இந்தவயல்வரப்பைவெட்டிப்
பேரு-அந்தக்கண்ணியை வெட்டிப்பண்ணை
சேரு-பொறுப்புள்ளவனுனையன்றி
யாரு-இதுவல்லவோகாரியம். (நந்தா)
|