திருநாளைப்போவார்76நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வாடா-வுன்கூலிமுழுதுந்தர
வோடா-பண்ணைப்பறைச்சிகளுடனே
நாடா-பழனங்கடோறும்நடப்
போடா-இதுவல்லவோபுண்ணியம். (நந்தா)

பாடு-உன்கறுப்புதெய்வத்தைக்கொண்
டாடு-கள்ளுசுள்ளுடன்பூசைகள்
போடு-நெல்விளையும்படிக்குவழி
தேடு-புத்திசொன்னேனிதுதான். (நந்தா)

___________

வசனம்.

வேதியர் நந்தனாரைச் சிதம்பரம்போகாதேயென்று கண்டித்துச்சொல்லுகின்றார்:

ராகம்-நாதநாமக்கிரியை; தாளம்-ஆதி.

பல்லவி.

சிதம்பரம்போகாதே-சொன்னேன்-சிதம்பரம்போகாதே.

அனுபல்லவி.

சிதம்பரம்போனால் ஹிதம்பெறலாமென்று
சேதிசொல்லுவதுன் சாதிக்கடுக்குமோ. (சிதம்)

சரணங்கள்.

கள்ளக்கும்பிடுதனைப் போடாதே-உன்
    கபடமெல்லாமிங்கே காட்டாதே
மெள்ளச்சொல்லடாமுழுமூடாகீழே
    தள்ளிவிட்டுவுன்னைத்தகுந்தபடி செய்வேன். (சிதம்)