திருநாளைப்போவார்77நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

நாத்தைப்பிடுங்கிகண்ணி நடவேணும்-அந்த
    நஞ்சைவயலைச்சற்றே யுழவேணும்
பார்த்துப்பரம்படித்துப் பழுதுவராமல்
    பாயுஞ்சலம்விட்டுப் பார்த்திடுவாய் நீ. (சிதம்)

அடிக்கடிமறுத்துநான் சொல்லவோ-நீ
    அடுமைக்காரப்பய லல்லவோ
எடுத்துக்காட்டுவே னிருக்குதுசாதனம்
    தடுத்துப்பேசினால் தாடையிலடிப்பேன். (சிதம்)

வசனம்.

அந்தணர் கண்டித்துச்சொன்னதால் நந்தனார் துயரமடைந்து சேரியில்வந்து
சிவனைநினைந்து பக்திபுரிந்து கொண்டாடுகிறார்.

ராகம்-ஹு ஸேனி; தாளம்-ரூபகம்.

பல்லவி.

பக்திபண்ணிக்கொண்டிருந்தால்-முக்திபெறலாமே

அனுபல்லவி.

எத்திசையுமெவ்வுயிர்க்கு மவ்வுயிராய்நிறைந்திருக்கும்
வஸ்துவென்றுஅம்பலவன் மலரடியே தினந்தோறும் (பக்தி)

சரணங்கள்.

கட்டழகிச்சோரனிடங் காதலது போலே
      கடுகிவருங்கன்றருகில் கபிலையது போலே
கட்டவரைத்துணிகிடையா கசடனொரு காலே
      காவலனார்பதம்வருகில் களிப்பதனைப் போலே
கண்டுமுறைகீழகலக்கண்டறியார் மதுமயக்கங்
      கற்பனையாமிப்பிரபஞ்சஞ்சொற்பனம்போலொப்பிமிகும் (பக்தி)