திருநாளைப்போவார்80நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம்-ஜஞ்ஜூடி ; தாளம்-ஆதி.

பல்லவி.

பாடுவாய்மனமே-சிவனைக்கொண்-டாடுவாய்தினமே.

சரணங்கள்.

இந்திரன்முதலிய இமையவர்கதிகார
நந்தியின்மீதேறும் நம்பன்பதம்போற்றி (பாடுவாய்)

ஆலமுண்டேய மரரைக்காத்ததிரு
நீலகண்டன்கழல் நெறியுடன்போற்றி (பாடுவாய்)

சீலமாதவர் சித்தம்நின்றாடுஞ்
சூலபாணியெனுஞ் சுயம்புதாள்போற்றி (பாடுவாய்)

மோகமாம்துன்பம் மூழ்கிக்கெடாமல்
ஆகமமுறையாய் அந்திவண்ணனைப் (பாடுவாய்)

பஞ்சாக்ஷரந்தனைப் பக்தியாயுருவேற்றி
மெய்ஞ்ஞானம் பெற்றுய்யமேலோனை நீபோற்றி (பாடுவாய்)

ராகம்-தோடி;தாளம்-ஆதி.

பல்லவி.

சிதம்பரமேநினை மனமே-முக்தி-பதம்பெறலாகும்மனமே

அனுபல்லவி.

சதம்சதம்மெனும்பொருள் பதம்பதம்வினை மருள்
சமரசநடம்புரி சாமிசிதம்பர நிமலன்திருவுரு நீகொள்ளரகர (சிதம்)

சரணங்கள்.

ஒழியாக்கவலைகொண்டு விழலாய் ஆனாய்
உண்மையில்லாவீட்டை நிழலாய்