திருநாளைப்போவார்81நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

தழுவாதிருந்ததில்லை சலனமில்மேல்   வீட்டை
சார்ந்தாலல்லோநல்லசாபல்யமாம்       பாட்டை
     சந்ததமும்பெற      பந்தமுமேயற
     எந்தவினைத்திற     முந்தூரம்முற (சிதம்)

     தேகமெடுத்தவருமை      யறியாய்-மோசத்
     தெரிவையர்வலைச்சிக்கி  முறியாய்
சாகுமட்டுஞ்சம்சாரமே             மேலிட்டு
சலியாமலேயுழைத்துச்சண்டாளமாந் துட்டு
     சம்பாத்தியமது       வம்பாகும்விதி
     நம்பாதித்ததி         தெம்பாயதிபதி (சிதம்)

உனக்குள்ளேயுணர்வாய்நீமோனம்-உண்மை
ஓம்வழிகாட்டுமே ஞானம்

தனக்குச்சிதம்பரஞ்சார்ந்தாலே தன்மயம்
சத்தியமாய்க்கூட்டும் சாம்பிராச்சிய சின்மயம்
சரிவரசிவகுரு பரமயமாய்வரு
முருவெளியெனுமொரு பொருளதுவாந்திரு (சிதம்)

நாமாவளி.

ஹர ஹர ஹர ஹர மகாதேவா
அம்பிகைமகிழ்பொன்னம்பலவா.

வசனம்.

நந்தனார் சிலநாளானபின்பு அடிமைகொண்ட அந்தணரிடத்தில் வந்து சிதம்பரம்போக
மிகவும் வருந்தி உத்தரவுகேட்கின்றார்: