விருத்தம்.
வேதியரே பெரியவரே
நல்லவரே நான்கடையன் விண்ணோர் மெச்சும்
சாதியரே பலகலையுங் கற்றுணர்ந்து புரையில்லாத் தவமே
செய்யும்
போதியரே புத்தியிலா யான்புலைய
னேதறியேன் புண்ய மூர்த்தி
ஆதிகுரு சிதம்பரத்தைக் காணவென்றேயாசைகொண்டேனனுப்புவீரே
ராகம்-ஆரபி; தாளம்-ஆதி.
பல்லவி.
தில்லைச்சிதம்பரத்தை
யொருதரமாகிலுந்
தெரிசித்துவாவென்றுத் தாரந்தாருமையே
அனுபல்லவி.
தில்லைச்சிதம்பரத்தைக்
கண்டால்பிறவிப்பிணி
இல்லையென்றுபெரியோர் சொல்லக்கேட்டிருக்கிறேன்
(தில்)
அல்லலறுக்குந்திரு
வம்பலநாயகன்
அல்லும்பகலுமாடி யானந்தம்பெருகிய (தில்)
ஆதிமுதலாயென்னை
யடிமைகொண்டதல்லவோ
வேதகுலமேயென்தன் மீதில்தயவுசெய்து. (தில்)
ராகம்-நாதநாமக்ரியை; தாளம்-மிச்ர
ஏகம்.
பல்லவி.
தெரிசிக்கவேணுஞ்-சிதம்பரத்தைத்-தெரிசிக்கவேணும்.
அனுபல்லவி.
தெரிசித்தவுடனுடல்
கரிசைப்பிணிகளறும்
பரிசுத்தமாகுமுன் மறுசுத்தமாறவே. (தெரிசிக்க)
சரணங்கள்.
பத்தர்பணியுந்திருக்
கூத்தன்சந்நிதிதொழு
தேத்திப்பிறவித்துய ராத்தியெப்போதும் (தெரிசிக்க)
|