திருநாளைப்போவார்83நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வேதனையடியவர் போதனைமுனிவர்கள்
நாதனைகரங்குவித் தாதரவாகவே (தெரிசிக்க)

ஈசனேபுலியூரில் வாசனேகனகச
பேசனேயென்றுநட ராஜனைப்போற்றி (தெரிசிக்க)

காமத்தையகல்பவர் வாமத்தினின்றுசிவ
நாமத்தைச்சொல்லியர்த்த சாமத்தில்வந்து (தெரிசிக்க)

ஞாலம்புகழுமவன் மாலையணியுங்கோ
பாலகிருஷ்ணன்தொழுஞ் சீலபொற்பாதத்தை. (தெரிசிக்க)

___________

வசனம்.

நந்தனார் தெரிசனஞ்செய்ய உத்தாரங்கேட்க அந்தணர்சொல் லுகின்றார்:

விருத்தம்.

புத்திசொல்லிக் கேளாத மூடாவுன் தன்
     புரட்டெல்லா நானறிவேன் போடா போடா
பத்தியென்றுஞ் சித்தியென்றும் பறையர்க் கேது
     பார்ப்பார தெய்வமது பாலிக்காது
குற்றமுண்டுன் சாதியிலே வழக்கமில்லாக்
     கொள்கையது சேரியிலே கூடாதப்பா
பித்தமது கொண்டவன்போ லிங்கேவந்து
    பேசாதே போபோவென் றேசுவானே.

ராகம்-முகாரி; தாளம்-ஆதி.

பல்லவி.

சிதம்பரதெரிதனமா-நீயதைச்-சிந்திக்கலாமாபறையா.