கீழேபுரண்டழுது தத்துபித்தென்றுத் தள்ளாடிய
காரணமென்ன” வென்று அந்தணர்
நந்தனாரைக் கேட்கின்றார்.
ராகம்-ஸூர்யகாந்தம்; தாளம்-மிச்ர
ஏகம்.
பல்லவி.
நந்தாவுனக்கிந்தப்ரமை வந்தகாரணம்
நானறிந்திடச் சொல்லுவாய்.
அனுபல்லவி.
அந்தரங்கமுள்ள சொந்தப்பறையனா
யண்டியிருப்பதுபோய் சண்டைபிடிக்கவந்தாய் (நந்தா)
சரணங்கள்.
சாதிமுறைமைதுறந்தாய்-தில்லைச்
சபாபதியைநினைந்தாய்
சூதுக்காரப்பறையருடன்கூடிச்
சும்மாவிருப்பது-எம்மாத்திரம்நான்
(நந்தா)
குலத்திலில்லாதவழக்கம்-நீயதைக்
கொண்டாடுகிறமுழக்கம்
வெளுத்ததினாலென்ன எருமைச்சாணியது
மேனியிலணிவாரோ-வையகந்தனில்
(நந்தா)
திருட்டுப்புரட்டுமறியாய்
பொல்லாத்
தீங்குவார்த்தையுரையாய்
முரட்டுத்தனத்தையென்முன்னேகாட்டி
விரட்டிப்பேசுறாய்-வெறிமயக்கமோ
அடா (நந்தா)
வசனம்.
வேதியர் நந்தனாரைப்பார்த்துச்
சிதம்பரப்பிரமைவந்த காரணமென்னவென்று
கேட்டபின் நந்தனார் வேதியருக்குச் சொல்லுவார்:
|