விருத்தம்.
மனங்கண்டவிடமெல்லாம்
போகாமலாணையிட்டு மறித்து
வாங்கி அனல்கண்டமெழுகதுபோ லெனதுள்ளந் தனதாக
வருளிக்காக்கும் புனல்கொண்டவேணியனைப்புண்ணியன்
புராந்தகனைப் போற்றிசெய்யக் கனங்கொண்டதில்லை
நகர்
போய்வருவேன் கருணைவழி காட்டுவீரே.
வசனம்.
நந்தனார் வேதியரைப்பார்த்து
உத்தாரங்கேட்க அந்தணர்
சொல்லுகின்றார்:
ராகம்-ஸாவேரி; தாளம்-ரூபகம்.
பல்லவி.
நட்டநடவுவிளையும்பொட்டவெளியைத்தொட்டபோதிலும்
(நட்)
சரணங்கள்.
கெட்டமதியைவிட்டுவிட்டு
கேளடாபண்ணையாளடா (நட்)
கிட்டநெருங்கும்பண்ணையுன்சால் பட்டதினால்பசுமைகொண்டு
(நட்)
விருத்தம்.
கதிரொருமுழமேநீளுங்கட்டு
முக்கலமே காணுந்
துதிபெறுநந்தாவுன்கைதொட்டதேதங்கமாகும்
பதிதனிற்பெருமைசொல்லும்பறையனாயிருந்துந்தில்லைச்
சிதம்பரப்பித்தேன் கொண்டாய்செய்தொழிலோ
வென்றார்.
வசனம்.
நந்தனாருக்குச் சிதம்பரப்பித்து
தெளியாமையால் வேதியர் என்னசெய்யப்
போகிறேனென்று துயரமுற்று நந்தனாரைப்பார்த்துப்
புலம்புவார்:
|