திருநாளைப்போவார்87நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம்-தன்யாசி;தாளம்-ஜம்பை.

பல்லவி.

பித்தனாய்ப்போனதென்ன-நந்தா (பித்த)

அனுபல்லவி.

எத்தனையோபுத்திக ளெடுத்துப்படித்தும் (பித்த)

சரணங்கள்.

சித்தமிப்படி செய்ததாரோ
பத்துதலில்லாமலே பண்ணியவராரோ
பக்தியென்றும்பெய ரிட்டதாரோ
நித்தமும் இப்படியே நிலையிட்டதாரோ (பித்த)

எத்திசைகளும்புகழ் பெற்றிருந்தும்-பல
வித்தைகளனேகம் விளம்பத்தெரிந்தும்
பக்தியோடுசகல மும்அறிந்தும்உனது
கர்த்தனெனும் பேரோடு நானேயிருந்தும்.(பித்த)

____________

வசனம்.

மனதிற்றுயரமுற்ற வேதியரை நந்தனார் மிகவும் வணங்கிச் சொல்லுகின்றார்:

விருத்தம்.

பித்தமதுதெளிந்துவிடமருந்துண்டு தில்லைவனம்பேணிச்சென்று
சத்திசிவகாமிப்பெண்சந்நிதியி னேராகித்தலைவணங்கி
தித்தியென்றுநடநமிடுந்திருக்கோலங் கண்குளிரத்தெரிசித்தானால்
பித்தமதுதெளிந்துவிடும்வே தாந்தமழைசொரியும்பெரியகோவே.