ராகம் - எதுகுலகாம்போதி;
தாளம் - மிச்ர ஏகம்.
பல்லவி.
பித்தந்தெளிய மருந்தொன்றிருக்குது
- பேரின்பமன்றுள்ளே.
அனுபல்லவி.
மற்றமருந்துகள் தின்றாலுமுள்ளுக்கு
வல்லே வல்லே-ஐயே அடுமை (பித்தந்தெளிய)
சரணங்கள்.
பாம்பும்புலியுமெய்ப்பாடுபட்டுத்தேடி
பார்த்துப்பயிரிட்டது
பாரளந்ததிருமாயனும்வேதனும் பார்த்துக்களித்ததுண்டு
பார்வதியென்றொருசீமாட்டியதில் பாதியைத்தின்றதுண்டு-இன்னம்
பாதியிருக்குபறையாநீயும்போய்ப்-பாரென்றுத்தாரந்தாருந்
தீரும் (பித்தந்தெளிய)
பத்துத்திசையும்பரவிப்படர்ந்தாலும்
பார்த்துப்பிடியாரே
தத்திக்குதிக்குந்தாளங்கள்போடுந் தண்டைச்சிலம்புகொஞ்சுந்
தித்திக்குந்தேனோசெங்கரும்போநல்ல சித்தமுடையர்க்கே-என்
சித்தத்தைக் கட்டியிழுக்குது அங்கேசென்றால்
போதுங்கண்டால் தீரும்
(பித்தந்தெளிய)
ஊரைச்சொன்னாலுமிப்பாவந்தொலையு
மூழ்வினையூடறுக்கும்
பேரைக்கொண்டாடிப்புலம்புகிறார்வெகு பேர்களுக்குப்பிழைப்பு
சாருநரைதிரைதீருமருந்துச் சாதியைப்பாராது-இன்னந்
தீராதநோய்கள் படைத்தவெனக்குத்
தீருந்தீருமையே அடுமை
(பித்தந்தெளிய)
___________
|