திருநாளைப்போவார்89நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம்-ஜெஞ்ஜூடி; தாளம்-ஆதி.

பல்லவி.

சிதம்பரம்போகாம       லிருப்பேனோ
சென்மத்தைவீணாக்கிக்   கெடுப்பேனோ (சிதம்பரம்)

சரணங்கள்.

பத்தியுமனமும்            பொருந்தினதங்கே
சத்தியஞ்சொன்னேன்      சடலமுமிங்கே (சிதம்பரம்)

ஆசையுநேசமு             மானந்தமங்கே
பேசலும்பாசமும்           பிதற்றலுமிங்கே (சிதம்பரம்)

வசனம்.

இப்படி நந்தனார் சொல்ல வேதியர் மூர்ச்சையடைந்து விழுந்து தெளிந்து
சொல்லுவார்;

விருத்தம்.

நாற்பது வேலிபூமி நடவுநட் டாக வில்லை
பார்ப்பது மில்லைசைவப் பழமது தின்றாய் பண்ணை
கார்ப்பது மில்லையுன்னைக் கைவிட மனதும் வல்லை
சேர்ப்பதா லாவதில்லைச் சேரியிற் றொலைந்து போடா.

வசனம்.

என்று வேதியர் இட்ட கட்டளைப்படி சேரியில் நந்தனார் வந்து பக்திபுரியும்
பன்னிரண்டுபேர்களைப் பார்த்துச்சொல்லுவார்.

ராகம்-மாஞ்சி; தாளம்-மிச்ர ஏகம்.

கண்ணிகள்

ஆசை நேச ராகுந் தோழரேகேளுங்கள்
பேசுந்தெய்வங்களுண்டோ யீசனல்லால்நமக்கு (ஆசை)