திருநாளைப்போவார்90நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஆயன் மாயன் அன்றடிமுடிகாணாத
நேயனழலுருவாய் நின்றநின்மலனல்லால் (ஆசை)

மண்ணாய் விண்ணாய் மற்றுளப்பொருள்களாய்
எள்ளுளெண்ணெய்போ லிருக்குமீசனல்லால் (ஆசை)

அருவா யுருவா யண்ட பகிரண்டமெங்கும்
பரமாய்நின்றதந்தப் பராபரத்தையல்லால். (ஆசை)

வசனம்.

என்று நந்தனார் சொல்லிப் பின்னும் ஆநந்தக் கூத்தாடுவார்.

ராகம்-தன்யாசி;தாளம்-திரிபுடை.

பல்லவி.

ஆநந்தக்கூத்தாடினார்-ஆநந்தநந்தர்
ஆநந்தக்கூத்தாடினார்.

அனுபல்லவி.

வானுந்துதிதேவர் முநிவர் ஜயஜயவென்று
வாழ்த்தும்பிரானடிகள் வாய்ப்பதெப்போதோவென்று (ஆநந்)

சரணங்கள்.

மாயவலைக்குட் பட்டு-அதிலெப்போதும்
மாளாத்துயரப் பட்டு
மாயுமுன்னாகவந்து வலியவாண்டருண்மூர்த்தி
நாயேன்களிக்கவென்முன்னாடுவரென்றேபோற்றி (ஆநந்)

கவலைப்படாதே நெஞ்சமே-காலன்கைப்பாசம்
கண்முன்வராதே அஞ்சுமே
தவநிலையையுணர்ந்த சன்மாக்கர்தமக்கன்று
தற்பதத்தைக்காட்டினோன் தனைக்காணுவேனாவென்று (ஆநந்)