திருநாளைப்போவார்91நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

காயமிதுவுஞ் சதமா-அன்றியுற்பவங்
காண்பதொவ்வொரு விதமா
ஆயுமெழுபிறப்பா யவதரித்தலுண்டென்றும்
தூயபதத்தாலந்தத் துகளற்றிருப்பேனென்றும் (ஆநந்)

வசனம்.

இவ்விதமாகப் பன்னிரண்டு பேர்களையும் வேலைசெய்ய வொட்டாமல், தன்
சமீபத்தில் நிற்கவைத்துக்கொண்டு போதித்திருப்பதை வேதியன் கேள்வியுற்று நந்தனாரைச்
சீறிக் கடுங்கோபஞ்செய்ய நந்தனார் வேதியருக்குச் சொல்லுகின்றார்.

ஸ்ரீராகம்;தாளம்-ஆதி.

பல்லவி.

ஏதுக்கென்மீது     இத்தனைபேதகம்
எண்ணுவனோ     தோதகம் (ஏது)

அனுபல்லவி.

காதகராம்மனக் கசடர்சொன்ன              சொல்லை
சாதனைசெய்து சாதித்தீர்பிழையொன்      றில்லை (ஏது)

சரணங்கள்.

நான் உங்களுக்குப்      பண்டு-சாசனஞ்செய்து
நலமாய்த்தந்த         துண்டு

தோன்றலேநீசொல்லுஞ் சொற்படிச்    செய்கிறேன்
பான்மையாகநித்தம் பக்தியாய்       உய்கிறேன் (ஏது)

காசளவு        நன்மை-செய்தோரை யொரு
காலும்மறவாத்  தன்மை