திருநாளைப்போவார்93நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணங்கள்.

நீருள்ளஆதனூர்நஞ்சை       புஞ்சைகளை
   நித்தமுமேர்கொண்டு      பழுது-அறச்
   சுத்தமதாகவே            யுழுது
   காலைப்                 பொழுது (பக்தி)

கறுப்பு வெளுப்பு சிவப்பு     நிறமுள்ளக்
   காளைகளைக்கட்டிப்      பூட்டிபொற்
   காறுவொன்றதிலே        மாட்டி
   ஏ                      ரோட்டி (பக்தி)

கந்தன்கறுப்பன்கடம்ப        னிடும்பன்
   கரியனவன்தம்பி         பெரியன்-சின்னக்
   காத்தானவன்மகன்        சொரியன்
   குள்ள                   நரியன் (பக்தி)

சீரகச்சம்பா சிறுகருடன்       சம்பா
   சிறந்தமணக்கத்தை        நட்டு-கம்பு
   சோளத்துவரையு          மிட்டு
   பயி                     ரிட்டு (பக்தி)

வசனம்.

இவ்விதமாய் ஏர்த்தொழில் புரிந்துகொண்டிருந்த நந்தனார், “இனிமேல்
சிதம்பரம்போவேன் போகாவிடில் பிராணனை விடுவேன். அன்றியும், சேரியில்
வரமாட்டே”னென்று சொல்லிக்கொண்டு வேதியர்பால் சென்று தலைவணங்கிக்
கரங்குவித்து மனந்துடித்துக் கண்டித்துச் சிதம்பரம்போக உத்தாரங் கேட்கின்றார்: