விருத்தம்.
பொய்ச்சடலம்
புழுக்கூடொன் பதுவாசற்றோற் பையைப்
போற்றிடுசெய்யுந்
துச்சனிவ னென்றெண்ணித் தள்ளாமனன் னெறியைச்
சொல்லவேணும்
பச்சைமிகுந் தொடியழகி சிவகாமி மாதுபங்கன்
பாதங்காண,
இச்சைமிகுந் திருக்குதையே அம்பலத்தைக் கண்டுகளித்திறைஞ்சுவேனே.
ராகம்-சாவேரி;தாளம்-ரூபகம்.
பல்லவி.
பொன்னம்பலவாண
னடிதொழுவா-ரொருவரன்றிப்
பிறவிக்கடலிடையில் கிடந்தழுவார்.
அனுபல்லவி.
இன்னும்பலதெய்வங்களுமிருக்கு-தெனக்கிவர்
போலவே
இல்லைதயவில்லைஏழை யிடத்திலிருந் தருள்செய்திடும் (பொ)
சரணங்கள்.
வேதமொருநான்குமறியாத
பரம்பொருளாகினும்
வேண்டும்பதஞ்சலிக்காக வேதில்லைப்பதிவந்து
பாதச்சிலம்பசையமணி குலுங்கப்பிறையிலங்க
பணிபடமாடவேசடையாடவேபரமானந்தக்கூத்தாடிய
(பொ)
உலகந்தனில்ககனமதுபோ
லெங்கினும்பரிபூரண
முருவற்றது குறையற்றிடுஞ்செல்வங்
கலியற்றவர்மதமற்றவர் விடையத்தினிலுருவற்றிட
கலைகற்றவர் வலயத்தவ ரிதயத்தினடனமாடிய
(பொ)
இரவுபகல்கருமங்களி
லிழுக்கும்பொரிகணங்களதை
இழுத்துவசப்படுத்தும்
வகையெனக்குத் தெரியாது
பரவிவரும்ராகாதிற்சர ணடங்கிமனதொடுங்கிவழி
பார்க்குமிடமார்க்குமரிதாக்கும்
பாலகிருஷ்ணன்தொழும் (பொ)
|