திருநாளைப்போவார்95நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

இவ்வகையாய்ச் சொல்லும் நந்தனாரைப்பார்த்து வேதியர் சொல்லுகின்றார்:

விருத்தம்.

மெள்ளப்பேசிமெழுகிறாயனுதின மூடாவுனக்கித்தனை
கள்ளக்கும்பிடிலாவதென்னபலனோ காட்டுப்பசாசல்லவோ
துள்ளித்துள்ளித்துடிக்கிறாய்சிவ பதஞ்செல்லாதுஉன்ஜாதியில்
எள்ளுக்கொல்லையில்மாடுவந்துதொடரா தேகும்படிசெல்லடா.

வசனம்.

இப்படிச்சொல்லிய வேதியருடனே நந்தனார் தனக்குத் தெரிந்தவித்தைகளை
அத்தருணத்தில் சொல்லிக்காட்டுவார்:

முன்நந்தனார், பின் வேதியருமாகச் சொல்லிக்கொள்ளும்

ஏட்டிக்குப்போட்டியான

இருசொல் அலங்காரம்.

நந்தனார் - தில்லையைப்பார்க்கவில்லையே யென்றார்
வேதியர்
- கொல்லையில்மிளகாயில்லையோ வென்றார்
நந்தனார்
- கள்ளம்போனாலுள்ளதுகாணு மென்றார்
வேதியர்
- வெள்ளம்போனாலுள்ளதுவிளையு மென்றார்
நந்தனார்
- திருச்சிற்றம்பலங்கண்டால்தேகங்களிக்கு மென்றார்
வேதியர்
- பொரிச்சகுழம்புகொண்டால் தேகம்பெருக்கு மென்றார்
நந்தனார்
- அரகராவென்றால்பாவம்போ மென்றார்
வேதியர்
- பறையனைக்கண்டால் பாவமா மென்றார்
நந்தனார்
- வெட்டவெளியிலேமனமுட்டிப்பாரு மென்றார்
வேதியர்
- பொட்டவெளியிலேகுழிவெட்டிப்பாரு மென்றார் 
நந்தனார்
- எனக்குஊறியஞானமாரியேமதி யென்றார்
வேதியர்
- உனக்குநாறியபறைச்சேரியேகதி யென்றார்