நந்தனார் - அன்னீதஞ்செய்யே
னென்றார்
வேதியர் - சொன்னதுதவறாதே யென்றார்
நந்தனார் - எங்கள்சாதிக்குஎன்னவழி
யென்றார்
வேதியர் - உங்கள்சாதிக்குஇந்தவழி
யென்றார்
நந்தனார் - உற்றதுஓது மென்றார்
வேதியர் - பெற்றதுபோது மென்றார்
நந்தனார் - பறையனாய்ப்பிறந்தேன்தலையெழுத்திது
வென்றார்
வேதியர் - மறையராய்ப்பிறந்தென்னவாழ்ந்திருப்பது
வென்றார்
நந்தனார் - வாய்க்காதவெனக்குவழிசொல்லுவீரே
யென்றார்
வேதியர் - காய்க்காதமரத்தில்கல்லெறியாரே
யென்றார்
நந்தனார் - எப்போதுமிப்படிச்செய்வதே
னென்றார்
வேதியர் - அப்போதுமிப்படிச்செய்ததே
னென்றார்
நந்தனார் - உலகமனைத்துங்கடவுளாய்நிறைந்ததே
னென்றார்
வேதியர் - பலகலைகற்றும்பறையனாய்ப்பிறந்ததே
னென்றார்
நந்தனார் - பழுதானசென்மம்படைத்தேனே
யென்றார்
வேதியர் - அழுதாலுங்கர்ம மடுக்காதோ
வென்றார்
நந்தனார் - காப்பதுன்பாரம்கட்டுவிடு
மென்றார்
வேதியர் - நாற்பதுவேலியைநட்டுவிடு
வென்றார்
நந்தனார் - அப்பன்கருணையிப்படியோ
வென்றார்
வேதியர் - தப்பினேனதுவுமொப்பிலே
னென்றார்
வசனம்.
நந்தனார் மெத்தவும் ஐயரை வணங்கி
உத்தாரங்கேட்கின்றார்.
விருத்தம்.
அல்லெனுங் குழலாள்மோக மண்டாது
வொருகாற் றொண்டர்
பல்லூழி காலஞ்செய்த பழவினைத் தொடக் கறுத்துச்
சொல்லினு மடங்கொணாத சுகக்கட லாட்டி வைக்குந்
தில்லைநா யகனைக்கண்டு தெரிசனஞ் செய்வே னென்றார்.
|