கண்ணி.
ராகம்-பேஹாக்; தாளம்-ஆதி.
மார்கழிமாதத் திருவாதிரைநாள்
வரப்போகிறதையே
மனதைப்புண்ணாகப் பண்ணாமலொருதரம்
போய்வாவென்றுசொல்லையே
கட்டையிருக்கையில் சிதம்பரம்போய்நான்
காணவேணுமையே
கசடனானாகிலு மாசைவிளையுதுன்
காலுக்குக்கும்பிடையே
காலில்நகமுளைத்த நாள்முதலாயுமக் கடுமைக்காரனையே
காலபாசத்தில் காட்டிக்கொடாமல்
காப்பாற்றிடுமையே
உள்ளங்காலில் வெள்ளெலும்பாட வோடியுழைத்தேனையே
உண்டதுமுறங்கின தன்றியில்வேறே யொன்றுங்காணிலைஐயே
எட்டுமிரண்டு மறியாதபேதைநா னெளியேனானையே
இன்னந்தாய்வயிற்றி னுள்ளணுகாம லிடங்காட்டிடுமையே
வெள்ளைவெளுத்திடுந் தண்ணீர்குடித்திடும் வெறியேனானையே
மேதினியில்நான் நாயினுங்கடையேன் வழிவிடவேணுமையே
திருநாளைப்போவார் என்னும் நந்தனார் சரித்திரக்
கீர்த்தனை. 121
தானந்தவங்க ளொன்றுங்காணா
தடியேனானையே
தளரவிடவும் வேண்டாமொருகோடி தருமமுண்டுஐயே
அல்லும்பகலுங்க ளாதரவாலே ஆளாகினேனையே
அன்புடனேநல்ல கதிபெறுவாயென் றனுப்பவேணுமையே.
___________
விருத்தம்.
சிலையணிந்திடும் வேளெரிந்திடச்
செய்திடுந்திரு மேனியைக்
கலந்தணைந்திடவேண்டுங்காதலைக் கண்டிடுமகிலமனைத்தையுந்
தலைசுமந்திடுசேடனார்குணத் தன்மையெய்திடும்நந்தனை
விலைக்குவாங்கியபெருமையாலிவன் வேணதெல்லாம்பேசுவான்.
|