திருநாளைப்போவார்99நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

இப்படிச் சிதம்பரம்போக உத்தாரங்கேட்ட நந்தனாருடைய சிவபத்தி பரிதாபத்தை
ஆதிசேடனாலுஞ் சொல்ல வொண்ணாத மகிமையைக்கொண்ட மகானுபாவனை,
அடிமைக்காரனென்று வேணபடி பேசுவார்.

ராகம்-முகாரி; தாளம்-ஆதி.

கண்ணிகள்.

மாடுதின்னும்புலையாவுனக்கு மார்கழித்திருநாளோ
தேடிக்கும்பிடும்யாரிடத்தேபோய்த் தீண்டாதேபோடா
ஆடுதின்னும்புலையாவுனக்கு ஆனித்தெரிசனமோ
நாடுசிரிக்கும்வார்த்தைகளன்றோ நாடாதேபோடா
நண்டுக்குக்கலியாணம்மூளை நரிக்குச்சங்கராந்தி
பண்டிகைபூசைதிருநாளுண்டோ பறையாநீபோடா
பூசைகள்செய்வாயோஆண்டவன் பொன்னடிதொழுவாயோ
கூசல்போடாதேபோடாயிங்கே கூழைக்கும்பி டிடாதே
கங்கையிலாடுவையோ அங்கே காணிக்கைபோடுவையோ
இங்கிதமறிவேனடிக்கடிவந்து யிரையாதேபோடா
அஞ்செழுத்தோதுவையோவுனக்கு மானந்தத்திருக்கூத்தோ
வஞ்சகவார்த்தைநாளைத்தெரியும் வாராதேபோடா.

____________

வசனம்.

அடா! நந்தா! சபாஷ் நன்றாயிக்கின்றது. நீ சிதம்பரம் போகவேண்டுமென்று
கேட்பதை ஆலோசித்தால் மிகுந்த ஆச்சரியமாயிக்கின்றதென்று வேதியர் பின்னுஞ்
சொல்லுகின்றார்;