13 II இராமநாடகக் கதையமைப்பு பாயிரம் : பாயிரத்துள் முதற்கண் வழிபடு கடவுள் வணக்கம் கூறப்படுகின்றது. அதன்கண் விநாயகர் தோத்திரமும், ஏற்புடைக் கடவுள் வணக்கத்தில் முதற்கண் அநுமார் தோத்திரமும், பின் பெருமாள் தோத்திரமும் கூறப்படுகின்றன. பின் அவையடக்கமாக அபராத க்ஷகையும் நூற்பெருமையும் அவையடக்கமும் மங்களமும் கூறப்படுகின்றன. அனுமார் தோத்திரத்தில் இராமாயணத்தில் அனுமார் பற்றிய நடைமுறைகளும் பெருமாள் தோத்திரத்தில் இராமாயண நிகழ்ச்சிகளின் சுருக்கமும் கூறப்படுகின்றன. பாலகாண்டம்: பாலகாண்டம் தொடக்கத்தில் கடவுள் வணக்கம் கூறப்படுகின்றது. அதன்கண் முதலில் இராமாயணமாகிய செயப்படுபொருள் கூறிப் பின் யானை முகசாமிக்கும் கலைமகளுக்கும் மணவாள மாமுனிவர், கெருடாழ்வார், மாருதி, சேனையர்கோனுடன்பதின்மர், வேதாந்த தேசிகர், காரிமாறன், பாடியகாரர், தேசிகர், கோதண்டம், வாள்சக்கரம் சங்கு ஆகியோருக்குத் துணை புரியுமாறு வணக்கம் சொல்கின்றார். பின்னர் தசரதச்சக்கரவர்த்தியின் அரசியலும் அவனது ஆட்சிச் சிறப்பும், தசரதன் மக்கட்பேறுவேண்டி வருந்தலும் கூறிப் பின்னர் பெருமாள் சந்நிதியில் தேவர்கள் அரக்கரின் கொடுமை பற்றிக்கூறிக்காக்க வேண்டி முறையிடுதலும், தேவர்களுக்குப் பெருமாள் அபயம் கூறியருளலும், பெருமாளின் அவதாரமும் அவரோடு அவரது பரிவாரங்களின் அவதாரமும் கூறப்படுகின்றன. பின்னர் விசுவாமித்திரர் தசரதனிடம்வந்து தமது வேள்வியைக்காக்க இராமனைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படியும் கேட்க முதலில் குறிப்பாக மறுத்த தசரதன் பின் வசிட்டர் பரிந்துரையால் இராமனையும் இலக்குவனையும் அவருடன் அனுப்பி வைத்தலும், வழியில் தாடகை எதிர்ப்படுதலும் இராமன் அவளைப் பெண்ணென்று கூறித் தயங்க விசுவாமித்திரர் அவளுடைய ஆற்றலையும் கொடுமையையும் கூறிக் கொல்லச் சொல்ல இராமன் தாடகையையும் அவளுக்குத் துணை புரியவந்த அரக்கர்களையும் சுபாகுவையும் கொன்று மாரீசன் கடலில் விழச்செய்தலும், பின் அகலிகை சாப நீக்கமும் அவள் வரலாறும் கூறப்படுகின்றன. பின் மிதிலைக்குச் சென்று கன்னிமாடத்திலிருந்து காட்சி தரும் சீதையை இராமன் காணுதலும் இருவரும் மனம் ஒன்றுபடுதலும் பின் சனகனிடம் விசுவாமித்திரர் இராமனுடைய பெருமையும் ஆற்றலும் குலவரலாறும் கூறலும் பின், சீதையை மணப்பதற்குப் பந்தயமாக வைத்தவில்லினை இராமன் வளைத்து முறித்தலும், இராமனை அவையோரும் ஊராரும் பாராட்டி மகிழ்தலும் பின்னர் அயோத்திக்குக் கலியாண ஓலை அனுப்பத் தசரதன் தன் மனைவிமார் மக்கள் பரிவாரங்களோடு மிதிலைக்குவருதலும், நகரம் அலங்கரிக்கப்படுதலும் இராமன் தேர்மேல் பவனிவருதலும் பவனி கண்ட மக்கள் உவந்துபாராட்டிப் போற்றுதலும் அவன் மணிமண்டபத்திற்கு எழுந்தருளலும் பின் சீதை திருமணக்கோலம் பூண்டுசபாமண்டபத்திற்கு வருதலும், இராமன் திருமணக்கோலக் கொள்ளுதலும் தம்பிமார்களும் உடன் கோலங்கொள்ள யாவரும் திருமண மண்டபத்திற்கு வருதலும், பலவாறு அலங்காரம் செய்யப்பெற்ற மணமண்டபத்தில் திருமணச்சடங்கு நிகழ்தலும், இராமரும் |