18 அரக்கர்களிடம் ஆணையிட விபீஷணன் தடுத்துத் தூதரைக் கொல்வது தகாது நமது ஆண்மைக்கு இழுக்கு என்றுகூற அனுமான் வாலில் பந்தத்தைச் சுற்றித் தீயிட்டுத் துரத்துமாறு இராவணன் கூறுதலும் அவ்வாறே அரக்கர்கள் தீயிடலும். அது கேட்டறிந்த சீதை தீ அனுமானைச் சுடாமல் இருக்க அக்கினிதேவனை வேண்டலும். அனுமான் அத்தீயைக்கொண்டே இலங்கையையும் அரண்மனையையும் தீமுட்டி எரிந்தழியச் செய்து கடல்தாண்டி மீளலும் வானரவீரர்கள் மதுவனத்தை அழித்து உண்டு மகிழ்தலும், அப்பொழுது கண்டேன் சீதையை என்று கூறிவந்து அனுமார் குதித்துச் சீதையின் இருப்பும் அவள் கற்பின் மேன்மையும் கூறிச் சூடாமணியைத் தருதலும் சூடாமணி கண்டு இராமன் உயிர்தழைத்து மகிழ்தலும், இலங்கைக்கு வானரப் படைகளோடு செல்ல இராமன் முதலானோர் தென் சமுத்திரக்கரையடைதலும் சுந்தர காண்டத்தில் கூறப்படுகின்றன. யுத்தகாண்டம் அனுமானால் எரியுண்ட இலங்கை மயனால் புதுப்பிக்கப் பட்டபின் இராவணன் மந்திரி சபையைக்கூட்டி யோசனை கேட்க உன்மத்தன் முதலாகப் பலரும் இராமனிருக்குமிடம் சென்று நரர்களையும் வானரர்களையும் அழிக்க வேண்டுமென்று கூறலும், கும்பகர்ணன் எழுந்து எல்லோரும் ஒருங்கெழுந்துபோரிடச் செய் என்று கூறலும் இந்திர சித்துத் தன்வலிமை கூற விபீஷணன் அவனை அடக்கி இராமன் பெருமையும் வலிமையும் கூறி இராவணனுக்கு அறிவுரை கூறலும் அவன் இவன்மேற் சினந்து துரத்தலும் விபீஷணன் இராமனைச் சரணடையச் செல்லுதலும் சுக்கிரீவன் முதலானோர் ஐயுற்றுகூற இராமன் சரணம் என்ற வரைக்காத்தல் என்கடமை என்று கூறுதலும் அனுமான் வீபீஷணனின் குணங்களை எடுத்துக் கூற இராமன் சுக்கிரீவனை வீபீஷணனை அழைத்து வருமாறு கூறலும் வீபீஷணன் இராமனைப் போற்றி வந்துஅடைக்கலம் புகுதலும் இராமனைக் கண்டு மகிழ்தலும் இராமன் அபயமளித்து இலங்கை அரசைக்கொடுத்தலும் பின்னர் இராவணன் ஆற்றலையும் படைப் பெருமையையும் வீபீஷணன் கூறக் கேட்டலும் விபீஷணன் அனுமானின் செயல்களை இராமனிடம் கூறிப் புகழ்ந்து போற்றுதலும் இராமன் சிரஞ்சீவியாக அனுமனை வாழ்த்திக் கடலில் அணைக்கட்ட வருணசெபம் செயம் செய்து வருணனை அழைக்கவும் அவன் வாராதிருத்தலை எண்ணிச் சினந்து வருணன் மேல் அம்பு தொடுத்தலும், கடல்கொந்தளித்துத் திசைகள் நடுங்க வருணன் வந்து அடைக்கலம் புகுதலும் இராமன் பொறுத்தருளிச் சேதுகட்டுமாறு ஆணையிடுதலும் நீலன் முதலாய வாணரவீரர்கள் சேதுபந்தனம் செய்தலும் இராமன் மகிழ்ந்து எல்லோருடனும் சுவேல மலையில் இருந்தபொழுது சுகன், சாரன் இருவரும் குரங்குருவில் வந்துஒற்றாராய் தலைக்கண்டு விபீஷணன் அவர்களைப் பிடித்து இராமன் முன் நிறுத்த இராமன் இராவணனுக்குப் புத்தி சொல்லி எச்சரிக்கைக்கூறி அவனிடம் செல்லுமாறு விடுத்தலும், அவர்கள்சென்று சொல்ல இராவணன் வெகுண்டான். அது கண்டு மாலியவான் அவனுக்குப் புத்தி கூறலும், மாலியனானை இராவணன் நிந்தித்துரைத்தலும், பின் இராவணன் உத்தரகோபுரத்திலிருந்து சரன் இராமன் முதலியோரைக் காட்டக் காணுதலும், சுவேல மலையிலிருந்து இராவணனைக் கண்ட சுக்கிரீவன் உடனே அவன்மேல் பாய்ந்து மல்யுத்தம் செய்து அவன் முடியைப் பறித்துக்கொண்டு வருதலும், இராமன்சுக்கிரீவன் செயலுக்குக் கோபித்துப் பின் |