22

இராமநாடகக் கட்டமைப்பு III & IV

நாடகம்
     நாடகம் என்பது மக்கள் கண்டுபிடித்துப் போற்றிவரும் கலைகளுள்
தலையாயது. போலச்செய்தல் முறையில் மக்களுடைய உடம்பு, உரை, உள்ளம்
ஆகிய முக்காரணங்களோடு எக்காலத்தும் ஒன்றியிருப்பது. கலைகளுள்
முதலாவது அது பேச்சுமொழி தோன்றுதற்குப் பன்னூறாண்டுகளின் முன்
தோன்றியது. நடிப்போடும் இசையோடும் அபேதமாயும் பேதமாயும்
தோன்றியதொரு அரிய கலையாகும்.

     நாடக மக்கள் நாகரிகமும் பண்பாடும் அறிவியலும் வளர வளர
வகைப்பாடுற்று வளர்ந்துவரும் நுண்மைசான்ற கவின்கலையாகும். அது
நாட்டிய நாடகம் பொருந நாடகம் என இருவகையாக வளர்ந்து வருகின்றது
(பொருந நாடகம் என்பது அவ்வப் பாத்திரங்களாக வேடம் பூண்டு நடிப்பது)
பொருந நாடகம் பல பிரிவுகளையுடையது. நாட்டிய நாடகத்தில் நடிப்பவர்க்கு
ஒப்பனையும் வினையமும் மட்டும்சாலும். பொருந நாடகத்திற்கு
ஒப்பனையோடு கூடிய வேடமும் வேண்டும். பிற விளக்கங்களை நாடக
நூலுள் கண்டு கொள்க.

நாட்டிய நாடகம்

     கண்விழிகளின் சுழல் நிலை இமைகளின் அசைவு புருவங்களின்
நெளிப்பு, உதடுகளின் மடிப்பு, விரிப்பு, குவிப்பு, திறப்பு, மூக்கின் அசைவு,
விடைப்பு ஏற்ற இறக்கம், நெற்றித் தசைகளின்மடிப்பு, சுருக்கு ஏற்ற இறக்கம்
ஆகியவற்றானும், தலையின் அசைவு சமனிலை, கழுத்தின் அசைவு
ஆகியவற்றானும் கைவிரல்களின் நெடிப்பு, மடிப்பு, பிரிப்பு குவிப்பு
கூட்டுவிலக்கு ஆகிய முத்திரைகளானும் முன்கை அசைவு நெறிவு
தோள்களின் குலுக்கு எடுப்பு ஒடுக்கம் முதலியவற்றானும் கால்களின் நிலைப்பு
இணைப்பு விரிப்பு எடுப்பு படுப்பு அசைவு பாதங்களின் இருப்பு, உந்தல்,
குவிப்பு முதலியவற்றானும் இடையின் அசைவு, நெறிப்பு, மார்பகக் கிளர்ச்சி
முதலியவற்றானும் முழுஉடம்பின நிற்றல், அசைதல், வளைதல், குனிதல்,
நெளித்தல் ஆகியவற்றானும், ஒன்றும் பலவுமாகிய கருத்துக்களை-
நிகழ்ச்சிகளை-காண்போர் திரிபின்றி உணருமாறு வினையம்
(வினையம்=அபிநயம்)செய்தல், இது செய்கைமொழி எனப்படும். பேச்சின்றிக்
குரல் ஒலித் துணையோடு ஒரு சருத்தை முன்னிருப்போருக்கு உணர்த்தும்
இம்மொழியே உலகிற்குப் பொதுவாகிய ஆதிமொழியாகும்.

     இத்தகு வினையங்களைத் தானல்லாத, பிறரது நிகழ்ச்சிகளை உணர்த்திக்
காட்டுவதற்காகச் செம்மை செய்து கால அளவைக்கு உட்படுத்தி இசைத்
துணையோடு அவையின் கண் கூறிப் பல்வேறு சுவைகள்வெளிப்பட நடித்துக்
காட்டும் போது அது நடம் நாட்டியம், கூத்து என்னும் கலையாகத் திகழும்,
இதன்கண் நடிப்பென்பது மக்கள், தேவர், விலங்கு, பறவை முதலாயவற்றின்
வடிவு சாயல்களுக்கு ஒப்பக் குரலாலிசைத்தல், பேசுதல், மெய்ப்பாடு