63 நாடக உறுப்பினர்கள் V தசரதன் அயோத்தி மாநகரச் சக்கரவர்த்தி சூரியவமிசத்து அஜன்புத்திரன் 60000 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவன் அறுபதினாயிரம் மனைவியரைக் கொண்டவன் என்னும் உபசார வழக்கு உண்டு. உரோமபத மன்னனிடம் தங்கியிருந்த கலைக்கோட்டு முனிவரால் புத்திர காமேஷ்டியாகஞ் செய்து இராமன் முதலாய நான்கு மக்களைப் பெற்றவன் இவனுடைய மனைவியருள் கோசலை கைகேயி சுமித்திரை ஆகியமூவரும் சிறந்தவர்கள் பத்துத் திசையிலும் தேர்செலுத்தும் வல்லமையுடையவன் அசுரத் தலைவனாகிய சம்பராசூரனை வென்றவன் அதற்குத் துணைபுரிந்த கைகேயிக்கு இரண்டு வரங்களை வேண்டும்போதுபெற்றுக்கொள்ள அளித்தவன். இளமைக் காலத்தில் வேட்டைக்குச் சென்றவிடத்து அறியாமல்கொன்ற அந்தணச் சிறுவனின் பெற்றோரால் புத்திரசோகத்தால் இறக்கும் சாபம் பெற்றவன் கழுகரசன் சடாயு செய்த உதவி காரணமாக அவனைத்தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டவன். கைகேயி கேட்டவரம் காரணமாக இராமன் கானகத்திற்குச் சென்ற பிரிவுகாரணமாக உயிர்நீத்தவன். இராமன் இலங்கைப் போரில் வென்றபின் சீதை தீக்குளிக்கும் போது தோன்றி சீதையின் சிறப்புக்கூறி இராமனுக்கு வரமளித்தவன். சக்கரவர்த்தி என்பது இவனுக்கமைந்த சிறப்புப் பெயர் அறத்தினைப்பேணிச் சத்தியங்காத்தவன். இராமன் தேவர் முனிவர்தம் வேண்டுகோளால் திருமாலின் அவதாரமாகக் கோசலையிடத்துத் தோன்றித்தசரதனுக்கு முதல் மகனாகப் பிறந்தவன். கைகேயியினால் வளர்க்கப் பெற்றவன். தன்தம்பிமார்களோடு வசிட்டனிடத்தில் சகல வித்தைகளும் பயின்றவன். இளமைக் காலத்தில் விளையாட்டாக மந்தரை (கூனி)யின் கூன் முதுகில் மண்ணுருண்டை எய்து அவளது கரவான கோபத்திற்குஆளாகி அவளது மனந்திரிந்த கைகேயியின் வரத்தால் தவவேடம் புனைந்து சீதையோடும் இலக்குமணனோடும் பதினான்கு ஆண்டு கானில் வசித்தவன் விசுவாமித்திரனுடன் அவன் யாகத்தைக்காக்கச் சென்று தாடகையை வதைத்தவன் விசுவாமித்திரனால் பல வரங்களைப் பெற்றவன் தன்னுடைய திருவடி தீண்டலால் கல்லுருவாயிருந்த அகலிகையின் சாபத்தைப் போக்கிப் பழைய வடிவடையச்செய்தவன். விசுவாமித்திரனுடன் மிதிலை சென்று சனகன் கன்யா சுல்மாகவைத்த சிவதனுசை வளைத்து முறித்துச் சீதையை மணந்தவன் பரசுராமனுடைய தனுசை வளைத்து நாணேற்றி அவன் அடிபணிய அவனது தவங்களை பரணத்துக்கிரையாக்கி வென்றவன். நகர்நீங்கிக் கங்கையைக் கடக்குங்காலத்து ஓடம்செலுத்திய வேடர் தலைவனாகிய குகனின் அன்புக்கு ஆளாகி அவனைத் தோழனாக ஏற்றுப் பாராட்டியவன். தண்டகவனரிஷிகளுக்கு அபயமளித்து அரக்கர்களை அழிக்க உடன்பட்டவன். சூர்பனகை காரணமாகஎதிர்த்த கரதூஷணர்களையும் அவர்கள் சேனையையும் அழித்தவன். சடாயுவைக் கண்டு மகிழ்ந்து தந்தையாக ஏற்றவன். பொன்மான் வடிவாக வந்து மயக்கிய மாரீசனைக் கொன்றவன். இராவணன் சீதையை எடுத்துச் சென்றபோது அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்த சடாயுவுக்காக இரங்கிநீர்க்கடன் செய்தவன். சவரிக்கு மோட்சமளித்து அவள் வழிகாட்டாலான் கிஷ்கிந்தை சென்றுஅனுமான் துணையால் சுக்கிரீவனை நட்பாக ஏற்று உடன் பிறப்பாகக் கொண்டு சிறப்பித்து அவன் பகையாகிய அவன் அண்ணன் வாலியை |