83

இராம நாடகம்

முன்னுரை

     பாரதநாடு பழம்பெரும் நாடு - நீர் அதன் புதல்வர்
இந்நினைவகற்றாதீர்? என்பது மகாகவிபாரதியின் அன்பாணை. மேற்கிலும்
தெற்கிலும் கிழக்கிலும் முப்பெரும் பரவைகளால் (கடல்களால்)
சூழப்பெற்றுள்ளமையின் கடல் கொண்ட குமரி நாட்டினின்றும் வடக்கு
நோக்கி வந்த மக்கள் மூன்றுதிசைகளின் வாயிலாகக் குடியேறிப் புதிய
நாகரிகத்தைத் தோற்றுவித்துப் பரதவர்களாக வாழ்ந்து உட்பகுதியில்
குடியேறினமையின் பரதவர்க்குரிய நாடு என்னும் பொருளில் இன்றைய
இந்தியநாடு பண்டுபாரதநாடென வழங்கப்பட்டது. புராண வரலாறு புனையப்
பெற்ற காலத்தில் பாரதநாடு என்னும்பெயர்க்கு வேறு காரணம்
அமைவதாயிற்று. அதனான் பாரதி பழம்பெரும் நாடு என்றார்.

     பழந்தமிழ் நாகரிகமும் பின் தோன்றிய ஆரியநாகரிகமும் கலப்புற்ற
காலத்திலிருந்துதோன்றிய வேதவழி நாகரிகம் பண்பட்டநிலையில் தோன்றிய
ஒப்பற்ற இலக்கியங்கள் இராமாயணம், மகாபாரதம் என்னும் இரண்டு
இதிகாசங்களாகும். இவ்விரு நூல்களுள் இராமாயணம்முந்தியது.
இராமாயணக் கதைக்கு அடிப்படை நிகழ்ச்சிகளும் வரலாறுகளும் உலகிற்குப்
பொதுவானவையாதலின் இராமாயணத்தின் அடிப்படைக் கதை மேற்கு
ஐரோப்பிய நாடுகளிலும் கிழக்காசியத் தீவுகளிலும் பாரதநாட்டிலும் சிறிது
சிறிது வேறுபட்டவடிவங்களில் அமைந்து பின்னர்அவ்வவ் நாட்டு மக்களின்
நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப உருப்பெற்று அமைவதாயிற்று.

     ஏறத்தாழ வான்மீகி முனிவர் காலத்திற்கு முன் ஒருவாறு
உருப்பெற்றிருந்த இக்கதை வைதிகசமயக் கோட்பாடுகளுக்கேற்ப
வான்மீகியால் இலக்கிய வடிவம் பெற்றுப் பாரதநாடு முழுதும் வழங்கி
வரலாயிற்று.

     இராமாயணம் தெய்வத்தன்மை, முடியாட்சி, வீரசாகசம், பக்தி,
நட்பின்வலிமை தியாகம்,காதல், கைக்கிளை, பெருந்திணைக் காமம் அறம்
வெல்லும் பாவந்தோற்கும் என்னும் மெய்ம்மைவாதம் மக்களின் அகப்புற
உணர்வுகள் ஆகியவற்றோடு தொடர்புடையதாக மாதவர் நோன்பும் மடவார்
கற்பும் விளங்க வரலாறு போல அமைந்தமையான் தொல் பழங்காலந்
தொட்டே கல்வி கேள்விகளாற் சிறந்த புலவர்களின் சிந்தையைக் கவர்ந்து
மக்கள் உள்ளங்களில் படிவதாயிற்று. இதன்கண்தும்பைப் போரும்
வாகைப்போரும் மிக்கமைந்து எழுச்சியைத் தருதலின் பேராண்மையுடையோர்
உள்ளங்களைக் கவர்வதாயிற்று. இறைவுணர்வுடையோரின் பக்திச்சுவையை
மிகுவிக்கும் சாதனமாகப்பாராயண நூலாகத் திகழ்வதாயிற்று.

     வான்மீகிக்கு முன்பே இது வரலாறு தழுவிய இதிகாசமாகச்
சான்றோரான் ஏற்கப்பட்டமையான்வைதிகசமயத்தைச் சார்ந்தவர்களேயன்றிச்
சமண, பௌத்த சமயத்தைச் சார்ந்த புலவோரும் இக்கதையை ஏற்றுச் சிறு
வேறுபாடுகளுடன் படைத்துக் கொள்வாராயினர்.

     வடமொழியில் வான்மீகரும், வசிஷ்டரும் நாரதரும் வேறு சிலரும்
தத்தம் நோக்கில்