90

நாடகக் கலையும், நாடக இலக்கியமும்

     நாடகம் என்பது மக்களாக்கப் பொருளாகத் தோன்றி மக்களால்
வளர்க்கப் பெற்று வரும்நுண்கலைகளுள் தலையாயதொரு கலையாகும்.
மக்களுடைய உடல், உரை, உள்ளம் என்னும் முக்கரணங்களோடும்
எக்காலத்தும் ஒன்றியிருக்கும் உள்பொருளாகும். தமிழர்தம் நோக்கில்
மொழியின் கூறுகளுள் ஒன்றாகும். முத்தமிழுள் மூத்ததும் சிறந்ததுமாகும்
எல்லா மொழியினருக்கும்பொது மொழியாகும். இசையோடும்
மெய்ப்பாட்டொடும் நிகழ்வதாகும் மக்கள் நாகரிகமும் பண்பாடும் வளரவளர
உடன் வளர்வதொரு கலையாகும்.

     நாடகம், நாட்டிய நாடகம், பொருந நாடகம், இசைநாடகம் என
மூவகைப்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் பல வகைப்படும். இவற்றை
வினையம் எனவும் கூத்து எனவும் கூறுவர். 

நாட்டிய நாடகம்

     கண்விழிகளின் சுழற்சி எழுச்சி, மதர்ப்பு, கூர்மை, அமைதி,
கண்ணிமைகளின் நெளிவு,அசைவு, ஒடுக்கம், விரிவு, வாய் உதடுகளின்
மடிப்பு, விரிப்பு, குவிப்பு, திறப்பு, விதிர்ப்பு, மூக்கின் நெளிப்பு, சுருக்கு
விடைப்பு, அசைவு ஆகியவற்றறானும் தலையின் நிலை அசைவு, எடுப்பு,
கவிழ்ப்பு ஆகியவற்றானும் தோள்களின் எடுப்பு, அசைவு, புயங்களின் அசைவு
கைகளின் சுழற்சி,மடக்கு, நீட்சி, நெளிப்பு, சேர்க்கை, விலக்கு
ஆகியவற்றாலும் உள்ளங்கை புறங்கைகள் ஆடல்,அமைதி, விரல்களின்
விரிப்பு, குவிவு, நிமிர்ச்சி, வளைவு, இளைப்பு, பிரிப்பு முதலியவற்றானும்
இடையின் அசைவு பக்கம் உயர்த்தல், தாழ்த்தல் கால்களின் சேர்க்கை,
விலக்கு, பின்னல்,பாதங்களின் மிதிப்பு, எழுச்சி, குதிப்பு, நடப்பு
முதலியவற்றானும் உடம்பின் நிமிர்வு, வளைவு, நெளிவு, குனிப்பு, குலுக்கு,
அமர்வு, எழுவு, உருள்வு திரிவு முதலியவற்றானும் இயற்றும் வினையங்கள்
தாளங்கள், முத்திரைகள், முகபாவங்கள் ஆகியவற்றால் காண்போரிடத்துத்
தாம் சொல்லக் கருதும்கருத்துக்களையும் எழுப்பக் கருதும் உணர்வுகளையும்
தோற்றுவிப்பது நாட்டிய நாடகம் என்று பெயர்பெறும். காலை ஊன்றி (நட்டு)
ஆடுவது மட்டுமின்றி தம் அசைவுகளால் ஒழுகிக் காட்டுதலான்நாட்டியம்
எனப்பட்டது. நடந்து காட்டுதலான் நாடகம் எனப்பட்டது (நடை = ஒழுக்கம்)
மொழியியலார் இதனைச் செய்கைமொழி என்பர்.

     குரலொலியும் பேச்சும் இன்றி முகம் கைகால் உடம்பு இவற்றின்
அசைவுகளால் ஒருவர்காண்போர் ஒருவர்க்குத் தன் கருத்துக்களை உணர்த்தி
விடுதலின் இதுவே ஆதிமொழியாக அமைகின்றதுஉலகப் பொது
மொழியாகவும் நடைபெறுகின்றது.

     இத்தகு வினைய, மெய்ப் பாடுகளான் தன்னைப் பற்றியதாகாமல், பிற
பிறரது நிகழ்வுகளை எடுத்துணர்த்துவதற்காகச் செம்மை செய்து ஒப்பனை
செய்து கொண்டு இசைத்துணையோடு அரங்கத்தின்கண் இருந்து உணர்வு
தோன்ற நடித்துக் காட்டுமிடத்து வினையமொழி நாட்டியக் கலையாகின்றது.
நடம், நடனம்,