முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
1 முதல் 10 வரை
|
|
- கொன்றை வேந்தன் செல்வ
னடியிணை
என்று மேத்தித் தொழுவோ
மியாமே.
(பதவுரை) கொன்றை -
கொன்றைப் பூமாலையைச் சூடிய,வேந்தன் - சிவபெருமானுக்கு,
செல்வன் - குமாரராகிய விநாயகக்கடவுளுடைய, அடி
இணை - பாதங்களிரண்டையும், யாம் -
நாம்,என்றும் - எந்நாளும், ஏத்தி -
துதிசெய்து, தொழுவோம் -வணங்குவோம்.
(பொழிப்புரை)
சிவபெருமானுக்குத் திருக்குமாரராகிய விநாயகக் கடவுளின் இரண்டு
திருவடிகளையும் நாம் எப்பொழுதும் துதித்து வணங்குவோம். (ஏ -
ஈற்றசை) |
|
|
|
|
1. அன்னையும் பிதாவும் முன்னறி
தெய்வம் |
(பதவுரை) அன்னையும் - தாயும்,
பிதாவும் - தகப்பனும், முன் - முன்னே,
அறி - காணப்பட்ட, தெய்வம் -
தெய்வங்களாவார்.
(பொழிப்புரை) தாயும் தந்தையும் முன்பு காணப்பட்ட
தெய்வங்களாவார். |
|
|
|
|
2. ஆலயம் தொழுவது சாலவு
நன்று |
(பதவுரை) ஆலயம் - கோயிலுக்குப்போய்,
தொழுவது -கடவுளை வணங்குவது, சாலவும் - மிகவும்,
நன்று - நல்லது.
(பொழிப்புரை) கோயிலுக்குப் போய்க் கடவுளை
வணங்குவது மிகவும் நல்லது |
|
|
|
|
3. இல்லற மல்லது நல்லற
மன்று |
(பதவுரை) இல்லறம் - (மனையாளோடு கூடிச் செய்யும்)
இல்லறமானது, நல் அறம் - நல்ல அறமாகும்;
அல்லது - இல்லற மல்லாத துறவறமானது, அன்று -
நல்ல அறமன்றாகும்.
(பொழிப்புரை) வீட்டிலிருந்து மனைவியுடன் கூடிச்
செய்யும் இல்லறமே நல்லறமாகும்; துறவறம் நல்லறமன்று. (இல்லறம் எளிதிற் செய்யத்
தகுந்தது. துறவறம் எளிதிற் செய்யக்
கூடாதது.). |
|
|
|
|
4. ஈயார் தேட்டைத் தீயார்
கொள்வர் |
(பதவுரை) ஈயார் - கொடாதவருடைய, தேட்டை
- சம்பாத்தியத்தை, தீயார் - (கள்வர் முதலிய)
தீயவர், கொள்வர் - அபகரிப்பர்
(பொழிப்புரை) வறியவர்க்குக் கொடாத உலோபிகள்
தேடிய பொருளைத் தீயோர் அபகரித்துச்
செல்வர். |
|
|
|
|
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்
கழகு |
(பதவுரை) உண்டி - உணவு,
சுருங்குதல் - குறைதல், பெண்டிர்க்கு -
பெண்களுக்கு, அழகு - அழகாகும்.
(பொழிப்புரை) மிதமாக உண்பது மாதர்களுக்குச்
சிறப்பாகும். |
|
|
|
|
6. ஊருடன் பகைக்கின் வேருடன்
கெடும் |
(பதவுரை) ஊருடன் - ஊராருடன்,
பகைக்கின் - (ஒருவன்)விரோதித்தால், வேருடன்
- (தன்) வமிசத்துடன், கெடும் - (அவன்) கெடுவான்.
(பொழிப்புரை) ஒருவன் தன் ஊராருடன்
பகைத்துக்கொண்டால் அடியுடன்
அழிந்துவிடுவான். |
|
|
|
|
-
7. எண்ணு மெழுத்தும் கண்ணெனத்
தகும் |
(பதவுரை) எண்ணும் - கணிதநூலும்,
எழுத்தும் - இலக்கணநூலும், கண் எனத் தகும் -
(மனிதருக்கு) இரண்டு கண்களென்று சொல்லப்படும்.
(பொழிப்புரை) கணிதமும் இலக்கணமும் மனிதர்க்கு
இரண்டு கண்கள் என்று
சொல்லத்தகும். |
|
|
|
|
8. ஏவா மக்கண் மூவா
மருந்து |
(பதவுரை) ஏவா - (பெற்றவர் இதைச் செய் என்று)
ஏவுதற்குமுன் குறிப்பறிந்து செய்கிற, மக்கள் - பிள்ளைகள்,
மூவாமருந்து - (அப்பெற்றவருக்கு) தேவாமிர்தம்
போல்வார்.
(பொழிப்புரை) பெற்றோர்கள் கட்டளை யிடுவதற்குமுன்
குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகள் அவர்களுக்குத் தேவாமிர்தத்தை
யொப்பார்கள். |
|
|
|
|
9. ஐயம் புகினுஞ் செய்வன
செய் |
(பதவுரை) ஐயம் புகினும் - பிச்சை எடுத்தாலும்,
செய்வன -செய்யத்தக்கவைகளை, செய் - (விடாது)
செய்
(பொழிப்புரை) பிச்சையெடுத்துச் சீவித்தாலும்
செய்யத்தக்க காரியங்களைச்
செய். |
|
|
|
|
10. ஒருவனைப் பற்றி யோரகத்
திரு |
(பதவுரை) ஒருவனை - (நற்குணமுடைய) ஒருவனை,
பற்றி - (துணையாகப்) பற்றிக்கொண்டு, ஓரகத்து
- ஓரிடத்தில், இரு - வாசம் பண்ணு.
(பொழிப்புரை) தக்கான் ஒருவனைத் துணையாகப்
பற்றிக்கொண்டு ஓரிடத்தில்
வாசஞ்செய் |
|
|
|
|