முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
51 முதல் 60 வரை
|
|
51. நீரகம் பொருந்திய வூரகத்
திரு |
(பதவுரை)
நீர் - நீர்வளமானது, அகம் - தனக்குள்ளேயே,
பொருந்திய - அமைந்த, ஊரகத்து -
ஊரினிடத்திலே, இரு - குடியிரு.
(பொழிப்புரை)
நீர்வளம் பொருந்திய ஊரிலே
குடியிரு. |
|
|
|
|
52. நுண்ணிய கருமமு மெண்ணித்
துணி |
(பதவுரை)
நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலையும்,
எண்ணி - (நன்றாக) ஆலோசித்து, துணி - (பின்பு
அதைச்) செய்யத்துணி.
(பொழிப்புரை)
சிறிய காரியத்தையும் நன்கு ஆலோசனை செய்து
செய்யத்துணி.
|
|
|
|
|
53. நூன்முறை தெரிந்து சீலத்
தொழுகு |
(பதவுரை)
நூல் - தருமநூலிலே சொல்லப்பட்ட, முறை -
(விதிகளின்) முறையை, தெரிந்து - அறிந்து,
சீலத்து - நல்லொழுக்க வழியில், ஒழுகு -
நட.
(பொழிப்புரை)
நீதிநூலிற் சொல்லப்பட்ட விதிகளை அறிந்து நல்லொழுக்க வழியில்
நட. |
|
|
|
|
54. நெஞ்சை யொளித்தொரு வஞ்சக
மில்லை |
(பதவுரை)
நெஞ்சை - (தம்முடைய) மனசுக்கு, ஒளித்த -
மறைக்கப்பட்ட, ஒரு வஞ்சகம் - யாதொரு வஞ்சனையும்,
இல்லை - இல்லை.
(பொழிப்புரை)
மனத்திற்குத் தெரியாத வஞ்சகம்
ஒன்றுமில்லை. |
|
|
|
|
55. நேரா நோன்பு சீரா
காது |
(பதவுரை)
நேரா - (மனசினால்) உடன்படாத, நோன்பு -
தவமானது, சீர் ஆகாது - சீராக முடியாது.
(பொழிப்புரை)
மனம்பொருந்திச் செய்யாத தவமானது செம்மையாக
முடியாது |
|
|
|
|
56. நைபவ ரெனினு நொய்ய
வுரையேல் |
(பதவுரை)
நைபவர் எனினும் - (கேட்போர் எதிர்பேசாமல்)வருந்துவோராயினும்,
நொய்ய - அற்பவார்த்தைகளை, உரையேல் -
சொல்லாதே.
(பொழிப்புரை)
கேட்பவர் எதிர்பேசாமல் வருந்து வோராயினும் அற்பவார்த்தைகளைப்
பேசாதே. |
|
|
|
|
57. நொய்யவ ரென்பவர் வெய்யவ
ராவர் |
(பதவுரை)
நொய்யவர் என்பவர் - (உருவத்தினாலே) சிறியவர் என்று
இகழப்படுவோரும், வெய்யவர் ஆவர் - (செய்காரியத்தால் யாவரும்)
விரும்பும் குணத்தை யுடையவராவர்.
(பொழிப்புரை)
உருவம் முதலியவற்றால் சிறியவரென்று இகழப்படுவோருஞ் செய்யுங் காரியத்தால் யாவரும்
விரும்புந்தன்மையினர் ஆவர்.
|
|
|
|
|
58. நோன்பென் பதுவே கொன்று
தின்னாமை |
(பதவுரை)
நோன்பு என்பது - தவமென்று சொல்லப்படுவது,
கொன்று - (ஒரு சீவனைக்) கொலை செய்து,
தின்னாமையே - (அதன் மாமிசத்தைத்)
தின்னாமையேயாம்.
(பொழிப்புரை)
விரதம் என்று சொல்லப்படுவது ஓருயிரைக் கொன்று அதன் ஊனைத்
தின்னாமையாம். |
|
|
|
|
59. பண்ணிய பயிரிற் புண்ணியம்
தெரியும் |
(பதவுரை)
பண்ணிய - (ஒருவன்) செய்த, பயிரின் -
பயிரின் விளைவினாலும் விளைவில்லாமையினாலும், புண்ணியம் -
(அவனிடத்தே) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும் -
அறியப்படும்.
(பொழிப்புரை)
ஒருவன் செய்த பயிர் விளைவதிலிருந்து அவன் முன்பு செய்த புண்ணியம் அறிந்து
கொள்ளப்படும். |
|
|
|
|
60. பாலோ
டாயினுங் கால மறிந்துண் |
(பதவுரை)
பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும்,
காலம் அறிந்து - (உண்ணத்தகுங்) காலத்தை அறிந்து,
உண் - (அதை) உண்ணு.
(பொழிப்புரை)
பாலுடன் கூடிய அன்னமாயினும் உண்ணத்தகும் காலமறிந்து
உண். |
|
|
|
|