முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
71 முதல் 80 வரை
|
|
71. மாரி யல்லது காரிய
மில்லை |
(பதவுரை) மாரி
அல்லது - மழையினால் அல்லாமல், காரியம் - யாதொரு
காரியமும், இல்லை - (யாருக்கும்நடப்பது)
இல்லை.
(பொழிப்புரை) மழை
யிருந்தாலல்லாமல் உலகத்தில் எக்காரியமும்
நடப்பதில்லை. |
|
|
|
|
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு
மழை |
(பதவுரை) மின்னுக்கு எல்லாம் - (வானத்திலே
காணப்பட்ட) மின்னலுக்கு எல்லாம், பின்னுக்கு மழை - பின்னே மழை
உண்டாகும்.
(பொழிப்புரை) மின்னுவதெல்லாம் பின்னே மழை
பெய்தற்கு அடையாளம். (ஒருவனுடைய ஊக்கம் முதலியவெல்லாம் அவனுக்குப் பின்னே வரும்
நன்மைக்கு அடையாளம்.) |
|
|
|
|
73. மீகாம னில்லா மரக்கல
மோடாது |
(பதவுரை) மீகாமன் - (தன்னை ஓட்டத்தக்க) மாலுமி,
இல்லா - இல்லாத, மரக்கலம் - கப்பல்,
ஓடாது - (கடலிலே செவ்வையாக) ஓடாது.
(பொழிப்புரை)
மாலுமி யில்லாத கப்பல் ஓடாது. (நல்வழியில் நடத்தும் தலைவனில்லாத
குடும்பமும், வேந்தனில்லாத நாடும் முதலியன செவ்வையாக
நடைபெறமாட்டா.) |
|
|
|
|
74. முற்பகல் செய்யிற் பிற்பகல்
விளையும் |
(பதவுரை) முற்பகல் - ஒரு பகலின் முன்பங்கிலே,
செய்யின் - (பிறனுக்குத் தீங்கு) செய்தால்,
பிற்பகல்- அதன் பின்பங்கிலே, விளையும் -
(செய்தவனுக்கு) அத்தீங்கு தானே உண்டாகும்.
(பொழிப்புரை)
ஒரு பகலின் முற்பாகத்தில் பிறருக்குத் தீங்கு செய்தால் பிற்பாகத்தில்
தனக்கு அத்தீங்கு உண்டாகும். (முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும்
என்பதைக் காட்டுதற்கு. நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகவும்
கொள்ளலாம்.) |
|
|
|
|
75. மூத்தோர் சொன்ன வார்த்தை
யமிர்தம் |
(பதவுரை) மூத்தோர் - (கல்வியறிவினாலே)
முதிர்ந்தவர், சொன்ன - சொல்லிய, வார்த்தை
- வார்த்தையானது, அமிர்தம் - தேவாமிர்தத்தைப்
போலும்.
(பொழிப்புரை) பெரியோர் சொல்லிய வார்த்தையானது
தேவாமிர்தம்போல் இன்பத்தைச்
செய்யும். |
|
|
|
|
76. மெத்தையிற் படுத்த னித்திரைக்
கழகு |
(பதவுரை) மெத்தையில் - பஞ்சணையிலே,
படுத்தல் - படுத்தலானது, நித்திரைக்கு -
(ஒருவன் செய்கிற) நித்திரைக்கு, அழகு -
அழகாகும்.
(பொழிப்புரை) மிருதுவான பஞ்சணையிற் படுத்தல்
நித்திரைக்கு அழகாகும். (மெத்தெனப்படுத்தல் என்றும்
பாடம்.) |
|
|
|
|
77. மேழிச் செல்வம் கோழை
படாது |
(பதவுரை) மேழி - கலப்பைபிடித்து உழுது பயிர்
செய்தலால் உண்டாகின்ற, செல்வம் - செல்வமானது, கோழை
படாது - (ஒருபோதும்) குறைவை அடையாது.
(பொழிப்புரை)
உழுது பயிர்செய்தலால் வரும் செல்வம்
சிறுமையுறாது. |
|
|
|
|
78. மைவிழி யார்தம் மனையகன்
றொழுகு |
(பதவுரை) மை விழியார் தம் - மை தீட்டிய
கண்களையுடைய வேசிகளது, மனை - வீட்டினை, அகன்று
ஒழுகு - விலகி நட.
(பொழிப்புரை) மைதீட்டிய
கண்களையுடைய பரத்தையர் மனையை அணுகாமல்
விலகிநட. |
|
|
|
|
79. மொழிவது மறுக்கி னழிவது
கருமம் |
(பதவுரை) மொழிவது - (பெரியோர்) சொல்வதை,
மறுக்கின் - கேளாமற் செய்தால், கருமம் -
(ஒருவன் செய்யுந்) தொழில், அழிவது -
கெடுவதாகும்.
(பொழிப்புரை) ஒருவன் பெரியோர் சொல்லை மீறி
நடந்தால் அவன் செய்யும் தொழில் பயன்படாது
அழியும். |
|
|
|
|
80. மோன மென்பது ஞான
வரம்பு |
(பதவுரை) மோனம் என்பது - மௌனநிலை என்பது,
ஞானம் - மெய்ஞ்ஞானத்துக்கு, வரம்பு -
எல்லையாகும்.
(பொழிப்புரை) மௌனம் என்பது ஞானத்திற்கு
எல்லையாம். |
|
|
|
|