11 முதல் 20 வரை
|
|
-
11. ஒருநாள் உணவை ஒழியென்றால்
ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால்
ஏலாய்-ஒருநாளும் என்னோ வறியாய் இடும்பைகூர்
என்வயிறே உன்னோடு வாழ்தல்
அரிது.
(பதவுரை) இடும்பைகூர் என்
வயிறே-துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி
என்றால் ஒழியாய்-(கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால்
விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது)
இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ
அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்;
உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல்
எனக்கு அருமையாக இருக்கின்றது.
வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல்
பிறிதில்லை எ - ம். (11) |
|
|
|
|
-
12. ஆற்றங் கரையின்
மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும்
விழுமன்றே-ஏற்றம் உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை
கண்டீர் பழுதுண்டு வேறோர்
பணிக்கு
(பதவுரை) ஆற்றங்கரையின்
மரமும்-ஆற்றின் கரையிலுள்ள மரமும், அரசு அறிய வீற்றிருந்த
வாழ்வும் - அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும்,
விழும் அன்றே-அழிந்து விடும் அல்லவா; (ஆதலினால்) உழுது
உண்டு வாழ்வு ஏற்றம் - உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்;
அதற்கு ஒப்பு இல்லை - அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை;
வேறு ஓர் பணிக்கு - வேறு வகையான தொழில் வாழ்க்கைக்கெல்லாம்,
பழுது உண்டு - தவறு உண்டு.
அம் : சாரியை. கண்டீர் : முன்னிலை
அசை.
உழுது பயிர்செய்து வாழும் வாழ்க்கையே சுதந்தர
முடையதும், குற்றமற்றதும், அழிவில்லாததும் ஆகிய வாழ்க்கையாகும் எ - ம்.
(12) |
|
|
|
|
-
13. ஆவாரை யாரே
அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே
தவிர்ப்பவர்-ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே
விலக்குவார் மெய்யம் புவியதன்
மேல்.
(பதவுரை) அம் புவியதன்மேல் -
அழகிய பூமியின்மேலே, மெய் - உண்மையாக, ஆவாரை
அழிப்பார் யார் - வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்?
அது அன்றி - அது வல்லாமல், சாவாரை தவிர்ப்பவர்
யார் - இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்?
ஓவாமல் - ஒழியாமல், ஐயம் புகுவாரை -
பிச்சைக்குச் செல்வோரை, விலக்குவார் யார் - தடுக்க வல்லவர்
யாவர்? ஏ மூன்றும் அசை.
ஊழினால் அடைதற்பாலனவாகிய ஆக்கக்
கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை எ - ம்.
(13) |
|
|
|
|
-
14. பிச்சைக்கு மூத்த குடி
வாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி
இடித்துண்கை-சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம்
அழியாது உயிர்விடுகை சால
உறும்
(பதவுரை)
பேசுங்கால்-சொல்லுமிடத்து, பிச்சைக்கு மூத்த
குடிவாழ்க்கை - பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்) பெரிய
குடிவாழ்க்கையாவது, பல இச்சை சொல்லி இடித்து உண்கை - பலவாகிய
இச்சைகளைப்பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம்;
சிச்சீ-சீ சீ (இது என்ன செய்கை), வயிறு
வளர்க்கைக்கு-இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும், மானம்
அழியாது - மானங் கெடாமல் உயிர் விடுகை - உயிரை
விடுதல், சால உறும் - மிகவும் பொருந்தும்.
பிறரிடத்திலே இச்சை பேசி வாங்கி உண்டு
மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரை விட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து எ -
ம். (14) |
|
|
|
|
திருவைந்தெழுந்தின்
சிறப்பு |
-
15. சிவாய நமவென்று
சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும்
இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத
வெல்லாம் விதியே மதியாய்
விடும்
(பதவுரை) சிவாயநம என்று சிந்தித்து
இருப்போர்க்கு - சிவாயநம வென்று தியானித்துக் கொண்டிருப்பவருக்கு,
ஒரு நாளும் அபாயம் இல்லை - ஒருபொழுதும் துன்பம் உண்டாகாது;
இதுவே-இஃதொன்றுமே, உபாயம்-(விதியைவெல்லுதற்
கேற்ற) உபாயமும், மதி - இது வல்லாத எல்லா அறிவுகளும்,
விதியே ஆய்விடும் - விதியின்படியே ஆகிவிடும்.
சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது
நினைந்துகொண் டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு எ - ம்.
(15) |
|
|
|
|
-
16. தண்ணீர்
நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்
கண்ணீர்மை
மாறாக் கருணையால்-பெண்ணீர்மை கற்பழியா ஆற்றால்
கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே
அறி
(பதவுரை) தண்ணீர் நில
நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர்
குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை
மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண்
நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத
வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த
பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மையுடையனவாகும்,
என்று அறி - என்று நீ அறிவாயாக.
நில நன்மையினாலே தண்ணீருக்கும்,
கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை
உண்டாகும் எ - ம். (16) |
|
|
|
|
தீவினையே வறுமைக்கு
வித்து |
-
17. செய்தீ வினையிருக்கத்
தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ
இருநிதியம்-வையத்து அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க்
கின்று வெறும்பானை பொங்குமோ
மேல்
(பதவுரை) வையத்துப் பாவம் அறும் என்ன
அறிந்து - பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து,
அன்று இடார்க்கு - அக்காலத்திலே ஈயாதவருக்கு, செய்
தீவினை இருக்க - செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க,
இன்று தெய்வத்தை நொந்தக்கால் - இப்பொழுது கடவுளை வெறுத்தால்,
இரு நிதியம் எய்த வருமோ - பெரிய திரவியம் பொருந்த வருமோ?
(வராது.) வெறும் பானைமேல் பொங்குமோ - வெறும் பானை (அடுப்பிலே
வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ; (பொங்காது.)
வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய
தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை எ-ம்.
(17) |
|
|
|
|
-
18. பெற்றார் பிறந்தார்
பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார்
எனவேண்டார்-மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர்
இடாரே சரணங் கொடுத்தாலுந்
தாம்.
(பதவுரை) பேர் உலகில் - பெரிய
நிலவுலகத்திலே, பெற்றார் - (எம்மைப்) பெற்றவர்,
பிறந்தார் - (எமக்குப்)
பிறந்தவர்,பெருநாட்டார் - (எம்முடைய) பெரிய தேசத்தார்,
உற்றார் - (எம்முடைய) சுற்றத்தார், உகந்தார்
- (எம்மை). நேசித்தவர், என வேண்டார் - என்று விரும்பாதவராகிய
உலோபிகள், மற்றோர் - பிறர், இரணம்
கொடுத்தால் - தம்முடம்பிலே புண்செய்தால், இடுவர் -
(அவருக்கு எல்லாம்) கொடுப்பர்; சரணம் கொடுத்தாலும் இடார் -
(முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தாராயினும் அவருக்கு ஒன்றுங் கொடார். ஏ
தாம் இரண்டும் அசை.
உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும்
கொடியவர்களுக்கன்றி நலம் புரியும் தாய் தந்தையர் முதலாயினோருக்குக் கொடார் எ -
ம். (18) |
|
|
|
|
-
19. சேவித்துஞ்
சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும்
பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம் பாழின்
உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே
நாம்
(பதவுரை) வயிற்றின்
கொடுமையால் - வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே,
சேவித்தும் - (பிறரைச்) சேவித்தும், சென்று
இரந்தும் - (பலரிடத்தே) போய் யாசித்தும், தெள்நீர்க் கடல்
கடந்தும் - தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும்,
பாவித்தும் - (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார்
ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் -
(செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும், நாம் - நாம்,
உடம்மை - இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே -
நாழி யரிசிக்காகவே, பாழின் - வீணிலே,
போவிப்பம் - செலுத்துகின்றேம்.
வீட்டு நெறியிற் செல்லும் பொருட்டு
அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் எ -
ம். (19) |
|
|
|
|
பரத்தையரால் செல்வம்
பாழாம் |
-
20. அம்மி துணையாக ஆறிழிந்த
ஆறொக்குங்
கொம்மை முலைபகர்வார்க்
கொண்டாட்டம்-இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம்
போக்கி வெறுமைக்கு வித்தாய்
விடும்.
(பதவுரை) கொம்மை முலை - திரட்சி பொருந்திய தனங்களை, பகர்வார்க் கொண்டாட்டம் - விற்கின்ற பரத்தையரை (இன்பங்காரணமாகக்) கொண்டாடுதல், அம்மி துணையாக - அம்மிக்கல்லே துணையாக, ஆறு இழிந்தவாறு ஒக்கும் - ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையைப்போலும்; (அன்றியும்) மாநிதியம் போக்கி - (அது) பெரிய செல்வத்தை அழித்து, வெறுமைக்கு வித்து ஆய்விடும் - வறுமைக்குக் காரணமாகிவிடும்; (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்று அன்று - அஃது இப்பிறப்பிற்கும் வருபிறப்பிற்கும் நல்லதாகாது.
விலைமகளிரைச் சேர்பவன் தான் கருதிய இன்பத்தை யடையாமல், வறுமையையும், பழிபாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவன் எ - ம். (20) |
|
|
|
|